twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இந்த நாள் 'உத்தமி' ஜூலி வாழ்க்கையில் மறக்க முடியாத நாள்

    By Siva
    |

    சென்னை: இந்த நாள் ஜூலியின் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள் ஆகும்.

    தமிழரின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் மெரினா கடற்கரையில் இளம் தலைமுறையினர் அமைதிப் புரட்சி நடத்தினர்.

    கல்லூரி மாணவ, மாணவியர், குடும்பத் தலைவிகள் என்று ஏராளமானோர் அந்த புரட்சியில் கலந்து கொண்டனர்.

    மெரினா

    மெரினா

    மெரினா புரட்சியில் எத்தனையோ பெண்கள் கலந்து கொண்டபோதிலும் ஒரு இளம்பெண் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அவர் துணிச்சலாக போட்ட கோஷமும் மக்களை கவர்ந்தது.

    வீரத் தமிழச்சி

    வீரத் தமிழச்சி

    மக்களின் கவனத்தை ஈர்த்த அந்த இளம் பெண் தான் ஜூலி. சின்னம்மா சின்னம்மா ஓபிஎஸ்ஸ எங்கம்மா என்று அவர் போட்ட கோஷம் மிகவும் பிரபலமானது.

    புகழ்

    புகழ்

    ஜல்லிக்கட்டு போராட்டத்தில் எத்தனையோ இளம் பெண்கள் கலந்து கொண்டு போராடியபோதும் ஜூலிக்கு பாராட்டுகள் வந்து குவிந்தன. ஜூலி டா, வீரத் தமிழச்சி டா என்று இளைஞர்கள் கொண்டாடிய அந்த நாள் இன்று தான்.

    பொய்

    பொய்

    வீரத் தமிழச்சி என்று எந்த இளைஞர்கள் புகழ்தார்களோ அவர்களே பின்னர் ஜூலியை திட்டி கலாய்க்கத் துவங்கினர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு ஜூலியை வீரத் தமிழச்சி என்று சொல்வதை மக்கள் நிறுத்திக் கொண்டனர்.

    நடிகை

    நடிகை

    ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் பிரபலமான ஜூலி உத்தமி என்கிற படம் மூலம் ஹீரோயினாகியுள்ளார். மேலும் விமலின் மன்னர் வகையறா படத்திலும் நடித்துள்ளார்.

    English summary
    A young woman became popular on 21.1.2017 by raising slogans against the state government during the Jallikkattu protest held in Marina beach. That young woman is none other than Julie.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X