twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இந்த நாள்...: நயன்தாரா துணிந்து வெளியே வந்த அந்த நாள் #பிளாஷ்பேக்

    By Siva
    |

    சென்னை: ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நயன்தாரா மெரினா கடற்கரைக்கு வந்து ஓராண்டு நிறைவடைந்துள்ளது.

    ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழக இளைஞர்கள் மெரினா கடற்கரையில் ஒரு அமைதி புரட்சியே செய்தனர். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நடந்த இந்த புரட்சியை பார்த்து நாடே வியந்தது.

    மெரினா புரட்சிக்கு திரையுலக பிரபலங்கள் சிலரும் ஆதரவு தெரிவித்திருந்தனர்.

    முகமூடி

    முகமூடி

    விஜய் முகத்தில் கைக்குட்டையை கட்டிக் கொண்டு மெரினா கடற்கரைக்கு வந்து புரட்சியில் ஈடுபட்ட இளம் தலைமுறையினருக்கு ஆதரவு தெரிவித்தார்.

    மகள்

    மகள்

    நடிகர் சிவகார்த்திகேயன் தனது மகள் ஆராத்யாவுடன் மெரினா கடற்கரைக்கு வந்து புரட்சியாளர்களுக்கு தனது ஆதரவை தெரிவித்தார். ஆராத்யா ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பதாகை ஏந்தி நின்றார்.

    நடிகை

    நடிகை

    ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்ட நயன்தாரா கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 21ம் தேதி மெரினா கடற்கரைக்கு வந்தார். நேரில் வந்து ஆதரவு தெரிவித்த ஒரே நடிகை எங்க தலைவி தான் என நயன்தாரா ரசிகர்கள் பெருமிதம் அடைந்தனர்.

    ஜிவி பிரகாஷ்

    ஜிவி பிரகாஷ்

    நடிகரும், டான்ஸ் மாஸ்டருமான ராகவா லாரன்ஸ் மெரினா புரட்சியில் இறங்கி வேலை பார்த்தார். நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷ், ஆர். ஜே. பாலாஜி ஆகியோர் மெரினா வந்து தங்களின் ஆதரவை தெரிவித்தனர்.

    துடைப்பம்

    துடைப்பம்

    மெரினா கடற்கரைக்கு வந்த நடிகர் மன்சூர் அலிகானோ வெட்கப்படாமல் துடைப்பத்தை எடுத்து புரட்சியாளர்கள் அமரும் இடத்தை சுத்தம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Nayanthara visited Marina beach on 21.01.2017 to show her support for the young generation that protested in support of Jallikkattu. It has been a year since Jallikkattu protest rocked the nation.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X