கொஞ்சம் பிளாஷ்பேக்: அந்த காரணத்துக்காக, கமல் படத்தில் இருந்து திடீரென விலகிய பாலிவுட் ஹீரோயின்!

By

சென்னை: கமல்ஹாசனின் படத்தில் சில நாட்கள் நடித்துவிட்டு, அந்த பிரபல பாலிவுட் நடிகை திடீரென விலகி இருக்கிறார்.

அந்தப் படத்தில் நடித்திருந்தால், அவர் தமிழ் சினிமாவில் நடித்த ஒரே படமாக அது ஆகியிருக்கும்.

சினிமாவில் நினைத்தது போல் எதுவும் நடந்துவிடாது என்பதற்கு இந்தப் படமும் சாட்சி

மீண்டும் கோகிலா

மீண்டும் கோகிலா

முதலில் ஒருவரை நடிக்க வைக்க பேசி முடிவு செய்திருந்தால், ஏதாவது ஒரு காரணம் தடை போட்டுவிடும் அதற்கு. அப்படித்தான் மீண்டும் கோகிலா படத்துக்கும். கமல்ஹாசன் ஹீரோவாக நடித்து 1981 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியான படம், இது. இதை கமல்ஹாசனின் நெருங்கிய நண்பர் ஜி.என்.ரங்கராஜன் இயக்கி இருந்தார்.

சிலிப்பி மொகடு

சிலிப்பி மொகடு

இவர், ஹரிதாஸ் பட இயக்குனருமான ஜி.என்.ஆர்.குமரவேலனின் தந்தை. இளையராஜா இசை அமைத்திருந்தார். என்.கே. விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்திருந்தார். அனந்துவின் கதை வசனத்தில் உருவான இந்தப் படம் அப்போது ஹிட்டானது. இந்த படம் தெலுங்கில் சிலிப்பி மொகடு என்ற பெயரில் டப் செய்யப்பட்டு ரிலீஸ் ஆனது.

ஹீரோயின் ஶ்ரீதேவி

ஹீரோயின் ஶ்ரீதேவி

நடிகையின் காதலில் விழுந்து விடும் கணவனை, மனைவி எப்படி மீட்கிறார் என்பதுதான் மீண்டும் கோகிலா படத்தின் கதை. ஶ்ரீதேவி, கமல்ஹாசனின் மனைவியாக நடித்திருப்பார். இன்னொரு ஹீரோயினாக, அதாவது கமல் காதலில் விழும் நடிகையக தீபா நடித்தார். சுருளிராஜன், எஸ்.என்.பார்வதி, தேங்காய் சீனிவாசன் உள்பட பலர் நடித்திருந்தனர்.

இந்தி நடிகை ரேகா

இந்தி நடிகை ரேகா

முதலில் இந்தப் படத்தை இயக்கியது மகேந்திரன். அவர் இயக்கும்போது கமல்ஹாசன், ஶ்ரீதேவி, ரேகா ஆகியோர் நடித்தனர். நடிகர் ஜெமினி கணேசன் மகளான ரேகா, இந்தியில் அப்போது டாப் ஹீரோயின். தமிழில் அவர் அறிமுகமாக இருந்த படம், மீண்டும் கோகிலா. இதில் அவர் நடிகையாக நடிக்க இருந்தார்.

கால்ஷீட் பிரச்னை

கால்ஷீட் பிரச்னை

ஷூட்டிங் தொடங்கி 3 ஆயிரம் அடி வரை படமாக்கப்பட்ட பின் படத்தில் இருந்து திடீரென விலகினார் இயக்குனர் மகேந்திரன். இதனால், சில நாட்கள் ஷூட்டிங் தடைபட்டது. பின்னர், கமல்ஹாசன் கேட்டுக் கொண்டதற்காக ஜி.என்.ரங்கராஜன் இயக்கினார். ஷூட்டிங் தொடங்கிய சில நாட்களிலேயே இந்தி நடிகை ரேகாவும் படத்தில் இருந்து விலகினார்.

Recommended Video

இப்போ வர படம் எல்லாமே கவுச்சி தான்| BHARATHIRAJA EXCLUSIVE INTERVIEW PART 2 | FILMIBEAT TAMIL
காரணமில்லை

காரணமில்லை

அவர் ஐந்து, ஆறு நாட்கள் படத்தில் நடித்திருந்தார். அவருக்கு கால்ஷீட் பிரச்னை என்று கூறப்பட்டாலும் அது காரணமில்லையாம். இதனால் அவர் நடிக்க வேண்டிய கேரக்டரில் நடிகை தீபா நடித்தார். ஆனால், ஒரு பேட்டியில் தான் தவறவிட்ட படம் என்று ரேகா குறிப்பிட்டிருந்தார், இந்த படத்தை!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X