வில்லன் டூ ஹீரோ... தமிழ் சினிமாவில் கோலோச்சும் சத்யராஜ் கட்டப்பாவை மிஞ்ச முடியுமா

By R VINOTH

சென்னை: எம்.ஜி.ஆர் கூட பழகுனதுனாலயோ என்னவோ, அவரு மாதிரியே அன்பு, பண்பு, இரக்க குணம், அவர் மாதிரியே மத்தவங்களுக்கு உதவுற நல்ல எண்ணம் எல்லாம் இருக்குறவரு நம்ம சத்யராஜ். இன்னிக்கு கோயம்புத்தூரு, அதோட சுத்துவட்டாரத்துல இருந்தும் வந்து தமிழ் சினிமா ஃபீல்டுல நெறய பேர் இருக்காங்க. குறிப்பா தயாரிப்பாளர், கதாசிரியர், நடிகர், வில்லன், காமெடியர்கள், டைரக்டரக்ள்னு எத்தனையோ பேர் கோலோச்சிக்கிட்டு இருக்காங்க.

சத்யராஜ் கோவையில இருந்து சென்னைக்கு வந்து ஆரம்பத்துல எஸ் பாஸ்னு சொல்லி சைடு கேரக்டர்ல நடிச்சார். அப்புறம் சட்டம் என் கையில் படத்துல வில்லனா பரிணாம வளர்ச்சியடஞ்சி, அப்பிடியே கொஞ்சம் வேகம் பிடிச்சி சாவி படத்துல வில்லன் கம் ஹீரோன்னு நடிச்சி, அதுல இருந்து டாப் கியர் எடுத்து ஹீரோவா அவதாரம் எடுத்து கிட்டத்தட்ட 100 படங்களுக்கு மேல நடிச்சிட்டார்.

FlimiBeat wishes to Actor Sathyaraj

பாக்கியராஜ் மொதல்ல வில்லன நடிச்சாலும் ஒரு படத்துலதான் நடிச்சாரு. அதுக்கப்புறமா அவரு கதாசிரியர் , திரைக்கதாசிரியர், டைரக்சன், நடிப்புன்னு வேற லெவல்ல அவரு போய்ட்டாரு.

ஆனா, நம்ம சத்யராஜ் அப்பிடி இல்ல. இவரு பலவிதமான காமெடியன், கேரக்டர் ஆர்ட்டிஸ்ட், ஹீரோன்னு பல கேரக்டர்கள்ல நடிச்சிருந்தாலும் கூட, சரித்திரப் படமான பாகுபலிங்குற படத்துல நடிச்சாரு பாருங்க. அதுல அவருக்கு கொடுத்த அருமையான கேரக்டரான கட்டப்பாங்குற கேரக்டர் தாங்க, சான்ஸே இல்லீங்க.

உண்மைய சொல்லணும்னா, இந்த கட்டப்பாவ மிஞ்சுறதுக்கு இன்னிக்கு வரைக்கும் ஒரு ஆளு கூட வரல. அந்த அளவுக்கு அந்த கட்டப்பா கேரக்டர் இருக்குதே. யப்பப்பா.

நம்ம சத்யராஜ், வாத்தியார் எம்.ஜி.ஆர் மாதிரியே அதே கட்டுமஸ்தமான பாடிய வச்சிக்கிட்டு, நல்லா எக்சர்சைஸ்லாம் பண்ணிக்கிட்டு, கிளி சீட்டு எடுக்குறது மாதிரியே, இந்தா எந்த கேரக்டர் வேணும், கதாநாயகனா, தகடு தகடுன்னு சொல்ற வில்லனா, கட்டப்பாங்குற கேரக்டரா ரோலா, வேலை கெடச்சிடிச்சி ஹீரோ மாதிரியே இன்னும் நடிச்சிட்டு இருக்காரு.

அதென்னமோ தெரியல, எம்.ஜி.ஆர் கூட பழகுனதுனாலயோ என்னவோ, அவரு மாதிரியே அன்பு, பண்பு, இரக்க குணம், அவர் மாதிரியே மத்தவங்களுக்கு உதவுர நல்ல எண்ணம் எல்லாம் இருக்குறவரு நம்ம சத்யராஜ்.

இப்ப கூட பாருங்க, நம்ம சத்யராஜ் திரும்பவும் ஹீரோவா தீர்ப்புகள் விற்கப்படும்னு ஒரு படத்துல நடிச்சிக்கிட்டு இருக்குறார். டூப் எதுவும் போடாமலே ஃபைட் பண்றாரு. ரொம்ப ரொம்ப அருமையான நடிகர்னு நெறய பேர் பாராட்டியிருக்காங்க. அப்படிப்பட்ட நம்ம சத்யராஜுக்கு நம்ம ஃபிலிமிபீட் சார்பா வாழ்த்துகள தெரிவிச்சுக்குறோம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X