For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  சந்துரு.. இதெல்லாம் உண்மைதானா?

  By Shankar
  |

  சென்னை: இயக்குநர் சேரன் மகளைக் காதலிக்கும் சந்துரு குறித்து இணையதளங்களில் எதிர்மறைச் செய்திகள் ஏராளமாகப் பரவி வருகின்றன.

  ஆனால் இவற்றை சந்துரு மறுத்துள்ளார். எந்த விசாரணைக்கும் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

  சேரன் குற்றச்சாட்டும் சந்துரு பதிலும்

  சேரன் குற்றச்சாட்டும் சந்துரு பதிலும்

  சந்துரு தமிழ் சினிமாவில் உதவி இயக்குனராக பணியாற்றுவதாகவும் டான்சர் என்றும் எம்.பி.ஏ. பட்டதாரி என்றும் கூறப்படுவது தவறு என்று சேரன் தரப்பினர் கூறியுள்ளனர்.

  சந்துருவிடம் கேட்டால், நான் உதவி இயக்குநர் என்று யாரிடமும் கூறியதில்லை. நடிக்க முயற்சி செய்து வருவதைத்தான் பலரிடமும் கூறி வருகிறேன். எனக்கு நடிக்க வாய்ப்பும் வந்துள்ளது. நான் எம்பிஏ பட்டதாரி என்றும் கூறவில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளார்.

  சந்துரு பின்னணி

  சந்துரு பின்னணி

  சந்துருவின் அப்பா சினிமாவில் சில காலம் வேலை பார்த்துள்ளார். இவரது அம்மா ஈஸ்வரி ஆந்திராவை சேர்ந்தவர். இருவரும் கலப்பு திருமணம் செய்து கொண்டவர்கள். தற்போது ஈஸ்வரி இருதய நோயாளியாக இருக்கிறார். சூளைமேட்டில் வசிக்கின்றனர். இவர்களுடன் சந்துருவின் அக்கா பத்மாவும் வசிக்கிறார். இவர்கள் ஏழு வருடங்களுக்கு முன்பு சிவகங்கை மாவட்டம் மானா மதுரையில் உள்ள அன்பு நகரில் வசித்துள்ளனர். பிறகு சென்னைக்கு குடி பெயர்ந்தார்கள்.

  மானாட மயிலாட

  மானாட மயிலாட

  ஆரம்பத்தில் மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் ஆடல்-பாடல், கலைநிகழ்ச்சிகள் நடத்தும் நடனக்குழுவில் சந்துரு நடனம் ஆடி உள்ளார். பிறகு டி.வி.யில் மானாட மயிலாட நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. இதில் ஆடி பரிசு வாங்கியுள்ளார்.

  சேரன் மகளுடன் காதல்

  சேரன் மகளுடன் காதல்

  இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதை வைத்து நிறைய நிகழ்ச்சிகளில் நடனம் ஆட தொடங்கினார். இதனால் அவருக்கு பெண் ரசிகைகள் சேர்ந்தனர். அப்படி ஒரு நிகழ்ச்சியில் ஆடிய போது தான் சேரன் மகள் தாமினியின் அறிமுகம் கிடைத்தது. பிறகு காதல் மலர்ந்தது. சேரனுக்கு காதல் விவரம் தெரிந்ததும் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவெடுத்தார். ஆனால் சந்துருவின் நடவடிக்கைகள் பற்றி விசாரித்தபோது பல பெண்களுடன் அவருக்கு தொடர்பு இருப்பது தெரிந்ததாகவும், எனவே அவருக்கு மகளை கட்டி கொடுக்க மறுத்ததாகவும் கூறியுள்ளார்.

  பெண்களுடன் தொடர்பு

  பெண்களுடன் தொடர்பு

  இரவு நேரங்களில் வெகுநேரம் பெண்களிடம் பேசி இருப்பது தெரிய வந்துள்ளது என்றும் மூன்று பெண்கள் சந்துருவுக்கு எதிராக போலீசில் புகார் அளித்துள்ளனர் என்றும் சேரன் குற்றம் சாட்டினார். தனது மூத்த மகளுக்கும் பேஸ்புக்கில் ‘ஐலவ்யூ' சொல்லியுள்ளதாக அவர் கூறியுள்ளார். இது குறித்து போலீஸ் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.

  இந்த குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ள சந்துரு, விசாரணையைச் சந்திக்க தயார் என்று கூறியுள்ளார்.

  பரவும் படங்கள்

  பரவும் படங்கள்

  இந்த நிலையில் சந்துரு சிகரெட் பிடிப்பது போன்றும், சேரன் மகளுடன் இருப்பதுபோன்றும் படங்கள் இன்டர்நெட்டில் பரவியுள்ளன. இந்தப் படங்கள், அவர் நடிக்கும் புதிய சினிமா ஒன்றிற்காக எடுக்கப்பட்ட போட்டோ ஷூட் படங்கள் என சந்துரு விளக்கம் தந்துள்ளார்.

  சந்துருவின் அக்கா

  சந்துருவின் அக்கா

  மேலும் சந்துருவின் அக்காவின் கடந்த காலம் குறித்தும் பல செய்திகள் பரவியுள்ளன. அதிமுகவைச் சேர்ந்த முஸ்லிம் பிரமுகரின் உறவினரை அவர் மணந்ததாகவும், இதை அந்த மதத்தில் ஒப்புக் கொள்ளாததால் இஸ்லாம் மதத்துக்கு மாறியதாகவும், பின்னர் கணவர் இறந்த பிறகு, அவரது உறவினர்களால் விரட்டப்பட்டதால் சென்னை வந்து வேறு திருமணம் செய்து கொண்டதாகவும் செய்திகள் பரவியுள்ளன. இதுகுறித்து சந்துரு தரப்பில் எந்த பதிலும் இல்லை.

  English summary
  Recently there are many articles and gossips round on Cheran daughter's lover Chandru in media and he is refused the same.

  சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more