விரட்டி விரட்டி துரத்தும் 'அந்த' ராசி: அதிரடி முடிவு எடுத்த ஹீரோ
ஹைதராபாத்: பாலகிருஷ்ணாவின் அந்த சென்டிமென்ட் மறுபடியும் வேலை செய்துவிட்டது.
தெலுங்கு நடிகர் என்.டி.ஆர்.-இன் வாழ்க்கை வரலாற்றை அவர் மகன் பாலகிருஷ்ணா தயாரித்து நடித்தார். அந்த படம் ஊத்திக் கொண்டது. இதையடுத்து அதன் இரண்டாம் பாகமான என்.டி.ஆர்.- மஹாநாயகுடு படம் ரிலீஸானது.

முதல் பாகத்தை போன்றே இந்த படமும் ஓடவில்லை. பாலகிருஷ்ணா ஒரு படத்தை தயாரித்தால் அது ஓடாது என்ற சென்டிமென்ட் உள்ளது. அவர் ராசியில்லாத தயாரிப்பாளர் என்ற பெயர் எடுத்துள்ளார். இந்நிலையில் அவர் தயாரித்து நடித்த இரண்டு படங்களும் அடுத்தடுத்து பிளாப் ஆகியுள்ளன.
இதையடுத்து தான் தயாரிப்பாளராக சரிபட்டு வர மாட்டோம் என்பதை பாலகிருஷ்ணா உணர்ந்துள்ளாராம். இதனால் கொஞ்ச காலம் படங்களை தயாரிப்பது இல்லை என்ற முடிவுக்கு வந்துள்ளாராம்.
பாலகிருஷ்ணா தற்போது பொயப்பட்டி சீனு இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தையும் அவர் தான் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் முந்தைய இரண்டு படங்களுக்கு ஏற்பட்ட நிலையை பார்த்து நடிப்பதோடு நிறுத்துக் கொண்டுள்ளார். அதனால் வேறு யாராவது ஒருவர் இந்த படத்தை தயாரிப்பார் என்று அவருக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











