twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    திரும்பவும் சிக்கலில் பிகில்.. பூக்கடை கதையால் பிரச்சினை.. விஜய் மன்னிப்பு கோராவிட்டால் போராட்டம்!

    |

    Recommended Video

    Bigil Pre-Booking : மழை வெயில் பாராமல் முந்திக்கொண்டு விஜய் ரசிகர்கள்

    சென்னை: நடிகர் விஜய் பகிரங்கமாக மன்னிப்பு கேட்காவிட்டால் மிகப்பெரிய அளவில் போராட்டம் வெடிக்கும் என பூ வியாபாரிகள் எச்சரித்துள்ளனர்.

    அட்லி இயக்கத்தில் விஜய், நயன்தாரா, கதிர் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் பிகில். இத்திரைப்படம் வரும் 25ம் தேதி ரிலீசாகிறது. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த மாதம் சென்னையை அடுத்த நடுவீரப்பட்டில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. அதில் பேசிய நடிகர் விஜய், பேனர் விழுந்த விபத்தில் மரணமடைந்த சுபஸ்ரீ குறித்து பேசினார்.

     சுந்தர் பிச்சைக்கு கோரிக்கைவிடுத்த சினிமா இயக்குநர் சீனு ராமசாமி.. ஏன்னு பாருங்க! சுந்தர் பிச்சைக்கு கோரிக்கைவிடுத்த சினிமா இயக்குநர் சீனு ராமசாமி.. ஏன்னு பாருங்க!

    குட்டிக்கதை

    குட்டிக்கதை

    வழக்கம் போல் ஒரு குட்டிக்கதை ஒன்றை விஜய் கூறினார். அதாவது, "பூக்கடையில் வேலை பார்த்து வந்த ஒருவரை பட்டாசு கடையில் வேலைக்கு அமர்த்தினார்களாம். ஆனால் பட்டாசு எதுவும் விற்கவே இல்லை. என்ன என்று பார்த்தால், பூக்கடையில் வேலை பார்த்த பழக்கத்தில் அந்த நபர் பட்டாசுகள் மீது தண்ணீர் தெளித்து வந்திருக்கிறார். எனவே யாரை எங்க உட்கார வைக்க வேண்டுமோ, அவரை அங்கே உட்கார வையுங்கள்", என விஜய் கூறினார்.

    பூவியாபாரிகள் எதிர்ப்பு

    பூவியாபாரிகள் எதிர்ப்பு

    விழாவில் முடிந்து ஒரு மாதம் ஆகிவிட்ட நிலையில், பூ வியாபாரிகள் விஜய்க்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ரீரங்கம் அண்ணா புஷ்ப தொழிலாளர்கள் சங்க செயலாளர் படையப்பா ரங்கராஜ், "பிகில் திரைப்பட ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் விஜய் பேசும்போது பூ வியாபாரிகளை மிகவும் இழிவாகப் பேசியுள்ளார். பூ வியாபாரம் செய்பவரை வெடி வியாபாரம் செய்ய வைத்த போது அதில் தண்ணி தெளித்ததாக மிகவும் இழிவாகப் பேசியுள்ளார். இது கண்டிக்கத்தக்கது", என்றார்.

    மன்னிப்பு கேட்க வேண்டும்

    மன்னிப்பு கேட்க வேண்டும்

    மேலும், "மாவட்டம் தோறும் தலா ஒரு லட்சம் பூ வியாபாரிகள் உள்ளனர். இந்நிலையில் பூ வியாபாரிகள் மனம் புண்படும் வகையில் அவர் பேசியிருப்பது வியாபாரிகளை வருத்தமடைய செய்துள்ளது. அவரது பேச்சை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். இல்லையென்றால் மாவட்டம் தோறும் நடிகர் விஜய் நடித்த பிகில் படத்திற்கு எதிராக போராட்டம் நடத்தப்படும். பூ வியாபாரிகள் அனைவரும் திரைப்படத்தை பார்க்காமல் புறக்கணிக்க வேண்டும்" என படையப்பா ரங்கராஜ் கூறினார்.

    புதிய தலைவலி

    புதிய தலைவலி

    பிகில் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசியதை அடுத்து, படத்திற்கு பல பிரச்சினைகள் வந்து கொண்டிருக்கின்றனர். கறிக்கடை வியாபாரிகள் ஏற்கனவே விஜய் மன்னிப்பு கேட்க வேண்டும் என கோரினர். இந்நிலையில் பூக்கடை வியாரிகளும் பட ரிலீஸ் சமயத்தில் போர்க்கொடி உயர்த்தியுள்ளது படக்குழுவுக்கு தலைவலியை ஏற்படுத்ததியுள்ளது. ஏற்கனவே கதை திருட்டு சர்ச்சையில் பிகில் சிக்சியிருப்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    The Srirangam flower merchants have demanded actor Vijay to apologize for his speech in Bigil audio launch.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X