twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஊரடங்கால் நிகழ்ச்சிகள் ரத்து.. எங்களுக்கும் நலத்திட்ட உதவிகள் வேண்டும்: நாட்டுப்புற கலைஞர்கள்

    |

    சென்னை: நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் நாட்டுப்புற கலைஞர்கள் மற்றும் நாடக கலைஞர்கள் சங்கத்தினர் நலத்திட்ட உதவிகளை அறிவிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Recommended Video

    ஊரடங்கால் நிகழ்ச்சிகள் ரத்து.. எங்களுக்கும் நலத்திட்ட உதவிகள் வேண்டும்: நாட்டுப்புற கலைஞர்கள்

    கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் இந்தியாவில் வரும் 14ஆம் தேதி வரை 144 தடை ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுக்க மக்கள் கூட்டம் சேரும் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

     Folk and Drama Artists demanding Tamil Nadu govt to help them due to Lock down

    இதன் காரணமாக கோவில் திருவிழாக்கள் உட்பட பல நிகழ்ச்சிகளை நம்பியுள்ள நாட்டுப்புற மற்றும் நாடகக் கலைஞர்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் நாட்டுப்புற மற்றும் நாடகக் கலைஞர்கள் சங்கத்தின் ஆலோசகரான பேராசிரியர் காளிஸ்வரன் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

    அதாவது, ஏற்கனே புயல், மற்றும் தேர்தல் காரணமாக நாட்டுப்புற கலைஞர்களும் நாடகக் கலைஞர்களும் பெரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இந்நிலையில் ஊரடங்கு உத்தரவால் தற்போது நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டிருப்பதால் கலைஞர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி இருப்பதாக கூறியிருக்கிறார்.

    அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை அறிவித்தது போன்று நாட்டுப்புற மற்றும் நாடகக் கலைஞர்களுக்கும் உதவி திட்டங்களை அறிவிக்க வேண்டும் என்று வீடியோ வாயிலாக தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

    English summary
    Folk and Drama Artists demanding Tamil Nadu govt to help them due to Lock down. Folk and Drama Artists association advicer Professor Kalishwaran has released video.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X