twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    என்னா குரல்.. என்னா டான்ஸ்.. லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட் ட்ரென்டில் கலக்கிய பரவை முனியம்மா!

    |

    சென்னை: லேட்டாக வந்தாலும் திரைத்துறையில் லேட்டஸ்ட் ட்ரென்டில் கலக்கியவர் பரவை முனியம்மா.

    Recommended Video

    Folk singer Paravai muniyamma passes away

    மதுரை மாவட்டம் பரவை பகுதியை சேர்ந்தவர் முனியம்மா. 1937ஆம் ஆண்டு பிறந்த பரவை முனியம்மா, சிறு வயதில் இருந்தே அந்தப் பகுதியில் நாட்டுப்புற பாடலை பாடியும் ஆடியும் நடித்து வந்தார்.

    நாட்டுப்புற பாடல்களால் சுற்று வட்டாரப் பகுதியில் பரவை முனியம்மா பிரபலமாகி இருந்தாலும், திரைத்துறைக்கு அவரது திறமை மிகவும் தாமதமாகத்தான் தெரிந்தது.

    மண் மனம் மாறாத நல் மனம்.. வருந்துகிறேன்.. பரவை முனியம்மா மறைவுக்கு கண்ணீர் சிந்திய விவேக்மண் மனம் மாறாத நல் மனம்.. வருந்துகிறேன்.. பரவை முனியம்மா மறைவுக்கு கண்ணீர் சிந்திய விவேக்

    சிங்கம் போல..

    சிங்கம் போல..

    இதனால் 60 வயதுக்கு பிறகு பரவை முனியம்மாவுக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது. நடிகர் விக்ரம் நடித்த தூள் படத்தில் முதல் முறையாக நடித்தார் பரவை முனியம்மா.
    இந்தப்படத்தில் அவர் பாடிய சிங்கம் போல நடந்து வரான் செல்லப் பேராண்டி பாடல் பெரும் பிரபலமானது. பரவை முனியம்மாவின் நடிப்பும் பெரிதும் பேசப்பட்டது.

    பாட்டி கதாப்பாத்திரம்

    பாட்டி கதாப்பாத்திரம்

    தூள், காதல் சடுகுடு, கோவில், தேவதையை கண்டேன், ஏய், சண்டை, பூ, தோரணை, தமிழ் படம், பலே பாண்டியா, வேங்கை, வீரம், மான் கராத்தே, சவாலே சமாளி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் பரவை முனியம்மா. கடைசியாக சதுர அடி என்ற படத்தில் நடித்தார். பெரும்பாலும் பாட்டி கதாப்பாத்திரத்திலேயே நடித்துள்ள பரவை முனியம்மா, நகைச்சுவை கதாப்பாத்திரத்திலும் தற்போதைய ட்ரென்டுக்கு ஏற்ப கலக்கியிருக்கிறார்.

    வெளிநாடுகளில் நிகழ்ச்சி

    வெளிநாடுகளில் நிகழ்ச்சி

    படங்களில் நடிப்பது மட்டுமின்றி நாட்டுப்புற பாடல்களை பாடும் ஏராளமான ஸ்டேஜ் நிகழ்ச்சிகளையும் நடத்தியிருக்கிறார். 2000க்கும் மேற்பட்ட மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருக்கிறார் பரவை முனியம்மா. லண்டன், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளிலும் நாட்டுப்புற பாடல்களை பாடியிருக்கிறார்.

    வறுமையில் வாடல்

    வறுமையில் வாடல்

    நாட்டுப்புற கலையில் அவரது சேவையை பாராட்டி தமிழக அரசு அவருக்கு கலைமாமணி விருது வழங்கி கவுரவித்திருக்கிறது. வயோதிகம் காரணமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இதனால் பட வாய்ப்புகள் குறைந்ததால் வறுமையால் வாடினார் பரவை முனியம்மா. மருத்துவ சிகிச்சைக்கு கூட பணம் இல்லாமல் தவித்தார் பரவை முனியம்மா.

    பிரபலங்கள் உதவி

    பிரபலங்கள் உதவி

    இதனையறிந்த அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, வைப்புத் தொகையாக பரவை முனியம்மாவுக்கு 6 லட்சம் ரூபாய் வழங்கினார். இந்தப்பணம் மாதம் தோறும் 6 ஆயிரம் ரூபாயாக அவருக்கு வழங்கப்பட்டு வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன் மீண்டும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பரவை முனியம்மாவுக்கு திரைத்துறையை சேர்ந்த பிரபலங்கள் பலரும் உதவினர்.

    இன்று இறுதிச்சடங்கு

    இன்று இறுதிச்சடங்கு

    நடிகர் சங்கம் சார்பில் அவருக்கு உதவித்தொகையும் வழங்கப்பட்டது. இந்த நிலையில், இன்று காலை அவர் காலமானார். அவரது மறைவுக்கு திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இன்று மாலை அவரது இறுதிச்சடங்கு நடக்கும் என்று உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

    English summary
    Folk singer Actress Paravai Muniyamma Passes away. She had been acted in many Movies. She had been introduced in Dhool Movie with Vikram.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X