செல்ல பிராணிகளுக்காக ஒரு குட்டி ஸ்டோரி ...க்யூட் ஸ்டோரி ஃபாலோ மீ ஆல்பம் !

சென்னை : ட்விஸ்ட்டி டேய்ல்ஸ் தயாரிப்பில் Pet Lovers க்கான இசை கொண்டாட்டமாக "Follow Follow Me"என்கிற ஆங்கில இசை ஆல்பம் வெளி வர உள்ளது. வீடுகளில் , அப்பார்ட்மென்டுகளில் நாய்கள் வளர்க்க பல கட்டுபாடுகள் உள்ள இக்காலகட்டத்தில் Pet lovers அதிகமாகி வருகின்றனர் .

நாய்கள் வீட்டின் ஓர் அங்கமாகிவிட்ட சுழ்நிலையில் மனிதனுக்கும் , நாய்களுக்கும் உள்ள பாசப்பினைப்பை வெளிப்படுத்தும் விதத்தில் கொண்டாட்டமாக இப்பாடல் படமாக்கப்பட்டுள்ளது. சென்னையில் Dog Themed Restaurant ஆன Twisty Tails'ன் உரிமையாளர் ரேகா டேண்டே மற்றும் பதினாறு பப்பிகளுடன் இணைந்து இந்த இசை ஆல்பத்தில் மெனக்கெட்டு செய்துள்ளனர்.

Follow Follow Me album song

நாய் பிரியர்களுக்கான கொண்டாட்ட மனநிலையையும், உணர்வுப்பூர்வமான பந்தத்தையும், தினசரி அவர்கள் கண்டுக்கொள்ளும் சேஷ்டைகளையும் வெளிபடுத்துகிறது இந்த Pup Pop Music video! சனித்தா ரவீந்திரன் பாடல் எழுத , இந்த ஆல்பத்தை இசை அமைத்து, இயக்கியிருக்கிறார் யதீஷ் மகாதேவா.

Follow Follow Me album song

தமிழ் , மலையாள மற்றும் கன்னடத்தில் பல படங்களுக்கு இசையைமைத்து உள்ளார் யதீஷ் . தமிழில் வெளியான சொன்னா புரியாது , 90ml போன்ற படங்களுக்கு கிரியேடிவ் புரோடிசர் ஆக பணியாற்றி உள்ளார். இப்பாடல் ஆங்கிலத்தை தொடர்ந்து தமிழ் , தெலுங்கு , ஹிந்தி மொழிகளில் வெளிவர உள்ளது.

Follow Follow Me album song

செல்ல பிராணிகள் மீது அளவு கடந்து பாசம் வைத்திருக்கும் மனிதர்களை நாம் அன்றாடம் பார்த்து தான் வருகிறோம் . எத்தனையோ திரைப்படங்களில் யானை, வித விதமான நாய் குட்டிகள் , பாம்பு , கிளி , புரா என்று அழகான காட்சிகள் பார்த்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்து கொண்டே தான் இருக்கிறோம் . அவர்களுக்காக சிறப்பான படங்களை தயாரித்து எடுப்பது இப்போதெல்லாம் மிக குறைவாவே உள்ளது . இருப்பினும் புதிய இயக்குனர்கள் இளைஞர்கள் பாடல் வடிவத்தில் இப்படி பட்ட ஜீவராசிகளுக்கு ஊக்கம் கொடுப்பது மட்டும் அல்லாமல் சமுதாயத்தில் செல்ல பிராணிகள் மீது ஒரு மிக பெரிய மரியாதையை உருவாக்க முயற்சிப்பது ஒரு நல்ல செயல் .

More from Filmibeat

Read more about: album song ஆல்பம்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X