இயற்கையின் காதலனை இழந்தோம்… திரைப்பிரபலங்கள் இரங்கல் !

சென்னை : நகைச்சுவை நடிகர் விவேக்கின் மரணம் குறித்து ஷங்கர்,நகுல் , அபிஷேக் பச்சன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Recommended Video

Trisha, Keerthy Suresh இன்னும் சில பிரபலங்கள் Vivekh உடலுக்கு அஞ்சலி #RIPVivek

நடிகர் விவேக்கின் உடல் விருகம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

திரைப்பிரபலங்கள் , பொதுமக்கள் உள்ளிட்ட பலர் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

காலமானார்

காலமானார்

நகைச்சுவைநடிகர் விவேக் நேற்றுகாலை தனது குடும்பத்தினருடன்பேசிக் கொண்டிருக்கும்போது திடீர் என மயங்கி விழுந்ததால், சென்னை வடபழனியிலுள்ள சிம்ஸ் மருத்துவமனைஅனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சைஅளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் உயிரிழந்தார். இது தொடர்பாக திரைப் பிரபலங்கள் பலர் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இயற்கையின் காதலன்

இயக்குனர் ஷங்கர் விவேக் குறித்த இரங்கல் பதிவில், இன்று நாம் ஒரு அற்புதமான நடிகரையும், அற்புதமான மனிதனையும், இயற்கையின் காதலனையும் இழந்தோம்: பத்மஸ்ரீ விவேக். எனது படங்களான தமிழ் திரைப்படத் தொழிலுக்கும் சமூகத்துக்கும் அவர் அளித்த பங்களிப்புகள் அளவிட முடியாதவை. அவரது ஆன்மா அமைதியாக இருக்கட்டும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது மனமார்ந்த இரங்கல் என்று தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

மிகவும் பிடித்த நடிகர்

விவேக்கின் மரணம் குறித்து கருத்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள நடிகர் நகுல், எனக்கு மிகவும் பிடித்த நடிகர்களில் ஒருவர். எனது முதல் படமான பாய்ஸில் அவருடன் பணியாற்றியுள்ளேன். திறமை, மனிதநேயம் கொண்டவர், உங்கள் அன்புக்குரியவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல். மங்கலம் சார் நான் உங்களை தவறவிட்டுவிட்டேன் என்று அந்த பதிவில்கூறியுள்ளார் .

மிகப்பெரிய மேதை

மேலும் விவேக்குறித்து அபிஷேக்பச்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். இதில், இன்று நாம் மிகப்பெரிய மேதையை , அபிமானியை இழந்து விட்டோம், விவேக் அவர்களின் குடும்பத்திற்கும் அவரது ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல் என்று பதிவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X