Blue Sattai Maran - கதையிலிருந்து சக்சஸ் பார்ட்டிவரை விக்ரம் பட காப்பிதான்.. ஜெயிலரை கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்
சென்னை: jailer Success Meet (ஜெயிலர் சக்சஸ் மீட்) கதையிலிருந்து சக்சஸ் பார்ட்டிவரை விக்ரம் பட ஃபார்மாலிட்டியைத்தான் ஜெயிலர் படக்குழு ஃபாலோ செய்வதாக ப்ளூ சட்டை மாறன் தெரிவித்திருக்கிறார்.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், சிவராஜ்குமார், மோகன் லால், சுனில், ஜாக்கி ஷெராஃப், விநாயகன், யோகி பாபு, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்த ஜெயிலர் படம் கடந்த மாதம் பத்தாம் தேதி வெளியானது. கடந்த சில வருடங்களாக ஹிட்டுக்கு ஏங்கிக்கொண்டிருந்த ரஜினிக்கு இந்தப் படம் மெகா ஹிட்டானது. இதனால் அவர் உற்சாகத்தில் இருக்கிறார்.

வசூல் சாதனை: விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் படத்துக்கு மெகா ரெஸ்பான்ஸ் கிடைத்தது. இதுவரை படம் 700 கோடி ரூபாய்வரை உலக அளவில் வசூலித்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இதற்கு முன்னர் சாதனை படைத்த விக்ரம், பொன்னியின் செல்வன் ஆகியவைகளின் வசூலை ஜெயிலர் தட்டி தூக்கியிருப்பதாக ரஜினியின் ரசிகர்கள் கூறிவருகின்றனர்.
பரிசு: ஜெயிலர் படம் மெகா ஹிட்டானதை அடுத்து ரஜினிகாந்த், நெல்சன் திலீப்குமார், அனிருத் ஆகியோருக்கு கார்களையும், செக்குகளையும் பரிசாக கொடுத்தார் தயாரிப்பாளர் கலாநிதிமாறன். மேலும் மீண்டும் சன் பிக்சர்ஸ் - நெல்சன் - ரஜினிகாந்த் கூட்டணி இணையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் இன்று ரஜினி - லோகேஷ் கனகராஜ் கூட்டணியை உறுதிப்படுத்தியிருக்கிறது சன் பிக்சர்ஸ்.
தங்க நாணயம்: ஹீரோ, இயக்குநர், இசையமைப்பாளருக்கு பரிசு கொடுத்த கலாநிதி மாறன் படத்தில் பணியாற்றிய மற்றவர்களுக்கு தங்க நாணயத்தை பரிசாக வழங்கினார். நேற்று நடந்த இந்த நிகழ்ச்சியில் கலாநிதி மாறன், நெல்சன் திலீப்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது எடுக்கப்பட்ட புகைபடங்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகின.
விக்ரம் பட காப்பி: நிகழ்ச்சி முடிந்த பிறகு படத்தில் பணியாற்றியவர்களுக்கு விருந்து வைக்கப்பட்டது. அப்போது கலாநிதி மாறன், நெல்சன் திலீப்குமார் ஆகியோரும் அந்த விருந்தில் அருகருகே அமர்ந்து சாப்பிட்டனர். இந்நிலையில் அந்தப் புகைப்படத்தை பகிர்ந்திருக்கும் ப்ளூ சட்டை மாறன், "கதையிலிருந்து சக்சஸ் பார்ட்டிவரை விக்ரம் படம் ஃபார்மாலிட்டியை ஜெயிலர் படக்குழு கடைப்பிடிக்கிறது" என்று ட்வீட் செய்திருக்கிறார்.
முன்னதாக விக்ரம் படத்தின் வெற்றி விழாவிலும் கமல் ஹாசனும், லோகேஷ் கனகராஜும் அருகருகே அமர்ந்து சாப்பிட்டது நினைவுகூரத்தக்கது. அதை மையப்படுத்திதான் மாறன் இப்படி ஒரு ட்வீட்டை போட்டிருக்கிறார். இதற்கிடையே ஜெயிலர் படத்தின் பல காட்சிகள் விக்ரம் படத்தை நினைவுப்படுத்துவதாக ரசிகர்கள் ஒருதரப்பினர் கூறியது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











