twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஜப்பானியர்களுக்கு ஒரு "முத்து"... எத்தியோப்பியர்களுக்கு ஒரு "மதர் இந்தியா"!

    By Siva
    |

    அட்டிஸ் அபாபா: எத்தியோப்பியாவில் உள்ள மக்களுக்கு 1957ம் ஆண்டு வெளியான மதர் இந்தியா படம் தான் இன்று வரையில் அவர்களை கவர்ந்த பாலிவுட் படமாக உள்ளது.

    ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் வசிக்கும் மக்கள் பாலிவுட் படங்களை விரும்பி பார்க்கிறார்கள். பாலிவுட்டில் ஏகப்பட்ட படங்கள் ரிலீஸாகும் நிலையில் எத்தியோப்பியா மக்களுக்கோ 1957ம் ஆண்டு சுனில் தத், நர்கிஸ் நடிப்பில் வெளியான மதர் இந்தியா படம் தான் பிடித்துள்ளது.

    For Ethiopians,

    இந்தி படங்கள் எத்தியோப்பியா மொழியில் டப் செய்யப்பட்டு வெளியாகி வருகின்றன. தங்களது மொழியில் டப் செய்யப்படாவிட்டாலும்கூட புரியாத இந்தி மொழியில் படத்தை பார்த்து ரசிக்கிறார்கள்.

    மதர் இந்தியா தவிர்த்து கரண் அர்ஜுன், குச் குச் ஹோத்தா ஹை, வீர் ஜரா ஆகிய படங்கள் எத்தியோப்பிய மக்களுக்கு மிகவும் பிடித்துள்ளது. மேலும் அந்நாட்டு மக்களுக்கு பிடித்த பாலிவுட் நடிகர்கள் சல்மான் கானும், ஷாருக்கானும் தான்.

    இது குறித்து எத்தியோப்பிய சுற்றுலா அமைப்பின் சிஇஓ சாலமன் கூறுகையில்,

    நான் 40 ஆண்டுகளுக்கு முன்பு மதர் இந்தியா படத்தை பார்த்தேன். தற்போது பலர் இந்திய படங்களை பார்க்கிறார்கள். மொழி புரியாவிட்டாலும் பார்க்கிறார்கள் என்றார்.

    எனக்கு மதர் இந்தியா படம் தான் பிடிக்கும். அந்த படத்தை பார்த்த பிறகு அரை மணிநேரம் அழுதேன் என டார்சி என்பவர் தெரிவித்துள்ளார். டார்சிக்கு சல்மான், ஷாருக்கான் என்றால் மிகவும் பிடிக்குமாம்.

    English summary
    For Ethiopians, Bollywood is synonymous with "Mother India" and such is the popularity of the Nargis-Sunil Dutt starrer movie that it continues to enthral them even after 59 years of its release.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X