twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சூப்பர் ஸ்டார் முதல் சோலார் ஸ்டார் வரை...

    By Mayura Akilan
    |

    தமிழ்நாட்டில் திரை நட்சத்திரங்களை தெய்வமாக கொண்டாடுகின்றனர். படம் ரிலீஸ் ஆனால் கட் அவுட்டிற்கு பாலாபிஷேகம் செய்து அமர்க்களப்படுத்துவார்கள்.

    நடிகர்கள் வீட்டில் விசேசம் என்றால் திருவிழாவாக போஸ்டர் அடிப்பார்கள். மனம் கவர்ந்த நடிகருக்கு கஷ்டம் என்றால் தன்னுடைய கஷ்டம் போல பீல் செய்து அதற்காக உருகுவார்கள்.

    ஒவ்வொரு ரசிகர்களுக்கு தங்களின் மனம் கவர்ந்த நடிகரின் பெயருக்கு முன்னால் பட்டம் சூட்டி அழகு பார்க்கின்றனர். வெள்ளித் திரையில் மின்னும் நட்சத்திரங்களின் பெயர்களை கூறுவதை விட அவர்களின் பட்டத்தை சொல்லித்தான் ரசிக்கின்றனர். தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்தும் சூப்பர் ஸ்டார் தொடங்கி தற்போது தனக்குத் தானே பட்டம் சூட்டிக் கொண்டுள்ள சோலார் ஸ்டார் வரை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

    ‘ஏழிசை மன்னன்’ தியாகராஜ பாகவதர்

    ‘ஏழிசை மன்னன்’ தியாகராஜ பாகவதர்

    நடிகர்களுக்கு பட்டம் சூட்டுவது தியாகராஜ பாகவதர் காலத்திலேயே தொடங்கிவிட்டது. பாடல்கள் பாடி ஹீரோவாக நடித்த தியாகராஜ பாகவதருக்கு மக்கள் கொடுத்த பட்டம் ஏழிசை மன்னன். இந்தியாவின் முதல் சூப்பர் ஸ்டாரும் இவர்தான்.

    மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்

    மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்

    எம்.ஜி.ஆர் ஹீரோவாக நடித்த காலத்தில் அவருக்கு பல பட்டங்கள் உண்டு. மக்கள் திலகம், பொன்மனச் செம்மல், புரட்சித் தலைவர், என பட்டம் சூட்டி அழகு பார்க்கப்பட்டவர் எம்.ஜி.ஆர்.

    நடிகர் திலகம் சிவாஜி கணேசன்

    நடிகர் திலகம் சிவாஜி கணேசன்

    பராசக்தியில் அறிமுகமாகி நடிப்பினால் மக்களின் மனம் கவர்ந்த சிவாஜி கணேசனுக்கு நடிகர் திலகம் என்று பட்டம் சூட்டி அழகு பார்த்தனர் ரசிகர்கள்.

    கலைவாணர் என்.எஸ்.கே, நடிகவேள் எம்.ஆர். ராதா

    கலைவாணர் என்.எஸ்.கே, நடிகவேள் எம்.ஆர். ராதா

    ஹீரோவிற்கு மட்டுமல்ல நகைச்சுவை நடிகர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களுக்கு கலைவாணர் பட்டம் கொடுத்து அழகு பார்த்தனர் தமிழ்நாட்டு மக்கள் அதேபோல் வில்லன் நடிகர் எம்.ஆர். ராதாவிற்கும் நடிகவேள் பட்டம் கொடுத்து மகிழ்ந்தனர்.

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

    அபூர்வ ராகங்களில் அறிமுகமான ரஜினி தன்னுடைய ஸ்டைலான நடிப்பினால் சூப்பர் ஸ்டாராக ரசிகர்களின் நெஞ்சங்களில் நிலைத்து நிற்கிறார்.

    உலக நாயகன் கமல்

    உலக நாயகன் கமல்

    காதல் இளவரசனாக ரசிகர்களால் கொண்டாடப்பட்ட கமல்ஹாசன் இன்றைக்கு தன்னுடைய நடிப்பினால் உலக நாயகனாக உயர்ந்து நிற்கிறார்.

    நவரச நாயகன் கார்த்திக்

    நவரச நாயகன் கார்த்திக்

    வாயில் வெத்தலையைப் போட்டு குதப்பியது போல பேசினாலும் தனக்கென்று தனி பாணி நடிப்பை கையாண்டார் கார்த்திக் 70,80 களில் தனக்கென்று தனி ரசிகர் வட்டத்தை உருவாக்கிய நடிகர் கார்த்திக் பெற்றது நவரச நாயகன் பட்டம்.

    ‘தல’ அஜீத் போல வருமா?

    ‘தல’ அஜீத் போல வருமா?

    சாக்லேட் பாய் வேடத்தில் தோன்றிய அஜீத் அமர்க்களம் படத்தின் மூலம் அதிரடி ஸ்டாராக உயர்ந்தார். அல்ட்டிமேட் ஸ்டார் என்பது ரசிகர்கள் கொடுத்த பட்டம். தீனா படத்திற்குப்பின்னர் ‘தல' என்பது செல்லப் பெயராகிப் போனது.

    இளைய தளபதி விஜய்

    இளைய தளபதி விஜய்

    இளைஞர்களை கவரும் வகையிலான வேடங்களில் நடித்த விஜய், காதல் காட்சிகளில் அதிகம் கவனம் செலுத்தினார். திருமலை, திருப்பாச்சி, சிவகாசி என பேரரசு வகையறா இயக்குநர்கள் விஜய்க்கு ஆக்சன் ஹீரோ அந்தஸ்தை வழங்கவே இளைய தளபதியாக மாறினார் விஜய்.

    சுப்ரீம் ஸ்டார் சரத்குமார்

    சுப்ரீம் ஸ்டார் சரத்குமார்

    வில்லனாக இருந்து கதாநாயகனாக மாறிய நடிகர் சரத்குமாருக்கு நாட்டாமை படத்திற்குப் பின்னர் சுப்ரீம் ஸ்டார் பட்டம் ரசிகர்களால் கிடைத்தது. சூர்ய வம்சம் படத்தின் வெற்றிக்குப் பின்னர் அந்தப் பெயரே நிலைத்து விட்டது.

    யங் சூப்பர் ஸ்டார் சிம்பு

    யங் சூப்பர் ஸ்டார் சிம்பு

    லிட்டில் சூப்பர் ஸ்டராக அறிமுகம் ஆன சிம்பு என்கிற சிலப்பரசன் விண்ணைத் தாண்டி வருவாயா படத்திற்குப் பின்னர்தான் பலரின் கவனத்தையே கவர ஆரம்பித்தார். அவர் யங் சூப்பர் ஸ்டார் ஆனது கூட அதன் பிறகுதான்.

    பவர் ஸ்டார் வந்துட்டாரே…

    பவர் ஸ்டார் வந்துட்டாரே…

    அந்த ஸ்டார், இந்த ஸ்டார் என ஸ்டார் பட்டம் கொடுத்து அசந்து போய் இருந்த வேலையில் தன்னுடைய சொந்த பணத்தை போட்டு படமெடுத்து தனக்குத் தானே பவர் ஸ்டார் என்று பட்டம் கொடுத்து அழகு பார்த்தவர் டாக்டர் சீனிவாசன்.

    கண்ணைப் பறிக்கும் சோலார் ஸ்டார்

    கண்ணைப் பறிக்கும் சோலார் ஸ்டார்

    இப்போதான் அடிக்கடி பவர் கட் ஆகுதே... அதனால் பவர் ஸ்டாரின் புகழ் மங்கிப் போகும் என்று நினைத்தாரோ என்னவோ தேவயானியின் கணவர் ராஜகுமாரனுக்கு ‘சோலார் ஸ்டார்' என்று பட்டம் சூட்டிவிட்டனர்.

    இன்னும் என்ன ஸ்டார் வரப்போறாங்க?

    இன்னும் என்ன ஸ்டார் வரப்போறாங்க?

    கன்னடத்தில் சேலஞ்சிங் ஸ்டார் என தர்சன் இருக்கிறார். தெலுங்கில் ரிபெல் ஸ்டார் என பிரபாஸ் கிளம்பியிருக்கிறார். நம் ஊர் பவருக்கு போட்டியாக ஆந்திராவிலும் ஒரு பவர் ஸ்டார் இருக்கிறார். இந்திய சினிமாவின் இனி இதேபோல எத்தனை ஸ்டார் கிளம்பப் போகிறார்களோ என பேஸ்த் அடித்துப் போயுள்ளனர் சினிமா ரசிகர்கள்.

    English summary
    In the glitzy world of south Indian cinema, the difference between a mere actor and a star is a grandiose appellation - an actor's rise to eminence is sealed only when his name is preceded by a title, not unlike with the rulers of yore. While there is the run-of-the-mill 'Superstar' - the title for Rajinikanth - compulsions of one-upmanship among fans of rival actors have led to the creation of 'Rebel Star' Prabhas in Andhra Pradesh, 'Supreme Star' Sarath Kumar in Tamil Nadu and 'Challenging Star' Darshan in Karnataka.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X