ஹரிஷ் கல்யாணின் தாராள பிரபுவுக்கு தாராளமா மியூசிக் போட்டுத் தர முன் வந்த 8 இசையமைப்பாளர்கள்!
சென்னை: தமிழ் சினிமாவில் இசைக்கென்று ஒரு தனி இடம் உண்டு. ஒரு இசையால் ஓடாத படங்களும் கூட ஓடிவிடும்.
ஹரீஷ் கல்யாண் மற்றும் தன்யா ஹோப் நடித்து வரும் தாராள பிரபு திரைப்படத்திற்கு எட்டு இசை அமைப்பாளர்கள் இசை அமைக்க உள்ளனர்.

இதனை படக்குழு அறிவித்துள்ளது. இது தமிழ் சினிமாவில் ஒரு வித்தியாசமான முயற்சி என்று கருதப்படுகிறது. இப்படம் விக்கி டோனார் என்ற இந்தி படத்தின் ரீமேக். இதனை கிருஷ்ணா மாரிமுத்து இயக்குகிறார்.
இதற்கு முன் இது போன்று பல இசை அமைப்பாளர்கள் இசை அமைத்த திரைப்படம் விக்ரம் மற்றும் ஜீவா இணைந்து நடித்து பிஜோய் நம்பியார் இயக்கிய டேவிட் இப்படத்திற்கு ஜந்து இசை அமைப்பாளர்கள் இணைந்து இசை அமைத்தனர்.
தற்போது தாராள பிரபு படத்தில் அனிருத், விவேக் - மெர்வின், ஷான் ரோல்டன், கபேர் வாசுகி, இன்னோ கேங்கா, பரத் சங்கர், மேட்லி பிளுஸ், ஒர்க்கா பேண்ட் என இத்தனை இசை அமைப்பாளர்கள் ஒரு படத்தில் இசை அமைப்பது இதுவே முதல்முறை. இவ்வளவு பெயர்களை அறிவித்துள்ளதால் படத்தில் வரும் பாடல்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications











