முதல் முறையாக சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் விஜய் ஆன்டனி
சென்னை : கோடியில் ஒருவன், பிச்சைக்காரன் 2, அக்னி சிறகுகள் என பல படங்களை கையில் வைத்துள்ளார் விஜய் ஆன்டனி. இதில் அக்னி சிறகுகள் படத்தின் சூட்டிங் தற்போது துவங்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் விஜய் ஆன்டனிக்கு ஜோடியாக ரித்திகா சிங் நடிக்கிறார். 2013 ல் விடியும் முன் என்ற த்ரில்லர் படத்தை எழுதி, இயக்கிய பாலாஜி கே.குமார் தான், கொலைகள் நிறைந்த இந்த மர்ம படத்தையும் இயக்க உள்ளார்.

இந்த படத்தில் விஜய் ஆன்டனி முதல் முறையாக சால்ட் அண்ட் பெப்பர் லுக் கெட்அப்பில் நடிக்க போகிறார். முதல் கட்ட படப்பிடிப்பை படக்குழு ஏற்கனவே நிறைவு செய்து விட்டது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்கப்பட உள்ளது.
இதற்கு முன் பேட்டி ஒன்றில் கூறிய பாலாஜி, பிரெஞ்ச் புத்தகம் ஒன்றை தழுவியே "விடியும் முன்" படத்தை எடுத்தேன் என்றார். அதற்கு பிறகு அந்த புத்தகத்தின் உரிமத்தை பாலாஜி பெற்று விட்டதாகவும், அதன் தொடர்ச்சியாகவே இந்த படத்தை இயக்கி வருவதாகவும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











