விவேக் நினைவாக மரங்கள் நட்ட ஆத்மிகா...வைரலாகும் ஃபோட்டோஸ்

சென்னை : ஹிப் ஹாப் தமிழா ஆதி நடித்த "மீசையை முறுக்கு" படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் ஆத்மிகா. இந்த படத்தில் விவேக், ஹிப்ஹாப் தமிழா ஆதியின் அப்பா கேரக்டரில் நடித்திருப்பார்.

தொடர்ந்து டைரக்டர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் நரகாசுரன் என்ற படத்தில் நடித்தார். ஆனால் அந்த படம் இதுவரை ரிலீசாகவில்லை. தற்போது விஜய் ஆன்டனி நடித்துள்ள கோடியில் ஒருவன், காட்டேரி, கண்ணை நம்பாதே போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

கவர்ச்சிக்கு மாறிய ஆத்மிகா

கவர்ச்சிக்கு மாறிய ஆத்மிகா

மீசையை முறுக்கு படத்திற்கு பிறகு வாய்ப்புகள் ஏதும் இல்லாமல் இருந்த ஆத்மிகா, இன்ஸ்டாகிராமில் ஹாட் ஃபோட்டோஷூட் நடத்திய ஃபோட்டோக்களை பகிர்ந்து வந்தார். இதனால் ரசிகர்கள் மட்டுமின்றி தயாரிப்பாளர்கள் பார்வையும் இவர் மேல்பட்டது.

 மரம் நட்ட ஆத்மிகா

மரம் நட்ட ஆத்மிகா

இந்நிலையில் மறைந்த நடிகர் விவேக் நினைவாக இன்று தனது வீட்டில் சில மரக்கன்றுகளை ஆத்மிகா நட்டுள்ளார். இந்த ஃபோட்டோ மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராமிலும் பதிவிட்டுள்ளார். இந்த ஃபோட்டோக்கள் தற்போது வைரலாகி வருகின்றன.

விவேக் நினைவாக செய்தேன்

விவேக் நினைவாக செய்தேன்

ஃபோட்டோக்களுடன் ஆத்மிகா பதிவிட்டுள்ள கேப்ஷனில், நடிகர் திரு.விவேக் அவர்களின் நினைவாக இன்று எனது வீட்டில் சில மரக்கன்றுகளை நட்டுள்ளேன்.என்னால் இயன்ற இடங்களில் எல்லாம் இந்த பணியைச் செய்ய முடிவு செய்துள்ளேன்.

நாம் நிறைவேற்றுவோம்

நாம் நிறைவேற்றுவோம்

சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நீரின் தேவை இதையெல்லாம் முன்கூட்டியே உணர்ந்து அன்றே மக்களுக்கு நன்மை சேர்க்கும் பணியைத் துவங்கியுள்ளார். அவர் விட்டுச்சென்ற ஒரு கோடி மரங்கள் நடுவது என்ற அவரின் மகத்தானக் கனவை நாம் அனைவரும் சேர்ந்து நிறைவேற்றுவோம். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X