ஃபோர்ப்ஸ் சிறந்த பிரபலங்கள் பட்டியலில் விஜய் அஜித்தை முந்திய சூர்யா... முதலிடம் யார்?
சென்னை : உலகப் புகழ்பெற்ற ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை இந்தியாவில் சிறந்த பிரபலங்களின் பட்டியலை ஆண்டு தோறும் வெளியிட்டு வருகிறது.
துறைசார்ந்த பங்களிப்பு, வருமானம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்தப் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான 100 பேர் பட்டியலை நேற்று வெளியிட்டது.
இதில் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கான் முதல் இடம் பிடித்துள்ளார். கடந்த ஆண்டிற்கான பட்டியலிலும் சல்மான் கான் முதலிடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

ஃபோர்ப்ஸ் பிரபலங்கள் பட்டியல்
ஃபோர்ப்ஸ் வெளியிட்ட இந்திய பிரபலங்கள் தரவரிசையில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் முதலிடம் பிடித்துள்ளார். ஷாருக்கான் இரண்டாவது இடத்திலும், கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

தீபிகா பின்னடைவு
நடிகர் அக்ஷய்குமார் 4வது இடத்திலும் உள்ளனர். முன்னாள் கிரிக்கெட் வீரரும், இந்நாள் ராஜ்யசபா எம்.பி-யுமான சச்சின் டெண்டுகல்கருக்கு 5-வது இடம் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு 6வது இடத்தில் இருந்து தீபிகா இந்த ஆண்டு 11வது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறார்.

பிரியங்கா சோப்ரா 7
ஆமிர் கான் ஆறாவது இடத்தைப் பிடித்திருக்கிறார். பிரியங்கா சோப்ராவுக்கு 7வது இடம் கிடைத்துள்ளது. 8வது இடத்தை கூல் கேப்டன் தோனி பிடித்திருக்கிறார். இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் 20-வது இடத்தை பிடித்துள்ளார்.

சல்மான் கான் வருமானம்
சல்மான்கானின் ஆண்டு வருமானம் 232 கோடி. ஷாருக்கான் வருமானம் 170 கோடியாக இருக்கிறது. விராட் கோஹ்லிக்கு 100 கோடியும், அக்ஷ்ய்குமாருக்கு 98 கோடியும், டெண்டுல்கருக்கு 82 கோடியும் இந்த வருடத்தில் வருமானமாக கிடைத்துள்ளது.

அஷ்வின் 23-வது இடம்
இந்தப் பட்டியலில் தென்னிந்தியாவைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் இடம்பிடித்துள்ளனர். அதில், தமிழ்நாட்டில் அதிகம் சம்பாதிப்பவராக ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளார். இவர் 12-வது இடத்தில் உள்ளார். இவரது ஆண்டு வருமானம் ரூ.57.6 கோடி. இவருக்கு அடுத்தபடியாக ரவிச்சந்திரன் அஷ்வின் 23-வது இடத்தில் உள்ளார்

விஜய், அஜித்
நடிகர் சூர்யா இந்தப் பட்டியலில் 25-வது இடத்தில் உள்ளார். இவரது ஆண்டு வருமானம் 34 கோடி. அஜித் 31.75 கோடி வருமானத்துடன் 27-வது இடத்திலும், விஜய் 29 கோடி வருமானத்துடன் 31-வது இடத்திலும் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











