Forbes அதிக சம்பளம் வாங்கும் 10 நடிகர்கள்: ஜாக்கி சானை பின்னுக்குத் தள்ளிய அக்ஷய் குமார்

By Siva

சென்னை: உலகின் அதிகம் சம்பளம் வாங்கும் 10 நடிகர்கள் பட்டியலில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் 4வது இடத்தில் உள்ளார்.

அதிகம் சம்பளம் வாங்கும் 10 நடிகர்கள் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் இடம்பிடித்துள்ள ஒரே இந்திய நடிகர் அக்ஷய் குமார் தான்.

Forbes highest paid actors list: Akshay Kumar beats Jackie Chan

கடந்த ஆண்டு ஜூன் முதல் இந்த ஆண்டு ஜூன் வரை நடிகர்கள் வாங்கிய சம்பளத்தை வைத்து தான் இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. போர்ப்ஸ் பட்டியலில் முன்னாள் குத்துச்சண்டை வீரரும், ஹாலிவுட் நடிகருமான ராக் என்கிற ட்வெய்ன் ஜான்சன் ரூ. 640 கோடி சம்பளம் பெற்று முதலிடத்தை பெற்றுள்ளார்.

தோர் படம் புகழ் கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் ரூ. 547 கோடி வருமானத்துடன் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். அயர்மேன் நடிகர் ராபர்ட் டவுனி ஜூனியர் ரூ. 473 கோடி வருமானத்துடன் 3வது இடத்திலும், பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் ரூ. 466 கோடியுடன் 4வது இடத்திலும் உள்ளனர். பிரபல நடிகர் ஜாக்கி சான் ரூ. 415 கோடி வருமானத்துடன் 5வது இடத்தில் உள்ளார்.

போர்ப்ஸ் பட்டியல் விபரம் இதோ,

ட்வெய்ன் ஜான்சன்- ரூ. 640 கோடி

கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் - ரூ. 547 கோடி

ராபர்ட் டவுனி ஜூனியர் - ரூ. 473 கோடி

அக்ஷய் குமார் - ரூ. 466 கோடி

ஜாக்கி சான் - ரூ. 415 கோடி

பிராட்லி கூப்பர் - ரூ. 408 கோடி

ஆடம் சாண்ட்லர் - ரூ. 408 கோடி

கிறிஸ் இவான்ஸ் - ரூ. 311 கோடி

பால் ரட் - ரூ. 293 கோடி

வில் ஸ்மித் - ரூ. 250 கோடி

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X