Don't Miss!
- News புதுக்கோட்டையிலிருந்து ஷர்மிளா.. அதென்ன வித்தியாசமான "வாசனை"? குழம்பி நின்ற சென்னை சூளைமேடு போலீஸ்
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Technology யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Finance ஆக்சிஸ் வங்கி சிஇஓ-க்கு அடித்தது யோகம்.. அடுத்த 3 வருடத்திற்கு ராஜ வாழ்க்கை..!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
போர்ப்ஸ் அதிகம் சம்பாதிக்கும் பிரபலங்கள் பட்டியல்: நயன் சாதனை, விஜய்க்கு எத்தனையாவது இடம்?
Recommended Video
சென்னை: 2018ம் ஆண்டில் அதிகம் சம்பாதித்த பிரபலங்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ள ஒரே தென்னிந்திய நடிகை நயன்தாரா தான்.
2018ம் ஆண்டில் அதிகம் சம்பாதித்த 100 பிரபலங்களின் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக பாலிவுட் நடிகர் சல்மான் கான் முதலிடத்தில் உள்ளார்.
கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி இரண்டாவது இடைத்தை பிடித்துள்ளார்.
சல்மான்
பாலிவுட் நடிகர் சல்மான் கான் ரூ. 253.25 கோடி வருமானத்துடன் போர்ப்ஸ் பட்டியலில் முதலிடத்திலும், ரூ. 228.09 கோடி வருமானத்துடன் கோஹ்லி இரண்டாவது இடத்திலும், ரூ. 185 கோடியுடன் நடிகர் அக்ஷய் குமார் 3வது இடத்திலும் உள்ளார்கள்.
ப்ரியங்கா சோப்ரா
கடந்த ஆண்டு போர்ப்ஸ் பட்டியலில் 2வது இடத்தில் இருந்த நடிகர் ஷாருக்கான் இந்த ஆண்டு ரூ. 56 கோடி வருவாயுடன் 13வது இடத்தில் உள்ளார். அதே போன்று கடந்த ஆண்டு 7வது இடத்தில் இருந்த நடிகை ப்ரியங்கா சோப்ரா ரூ. 18 கோடி வருமானத்துடன் 49வது இடத்தில் உள்ளார். அவரது வருமானம் ரூ,. 50 கோடி குறைந்துள்ளது.
தீபிகா
போர்ப்ஸ் பட்டியலில் நடிகை தீபிகா படுகோனே ரூ. 112.8 கோடி வருவாயுடன் 4வது இடத்தில் உள்ளார். 2012ம் ஆண்டில் இருந்து வெளியாகும் இந்த பட்டியலில் முதல் முறையாக ஒரு பெண் முதல் 5 இடங்களுக்குள் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நயன்தாரா
ரூ. 15.17 கோடி வருவாயுடன் நயன்தாரா 69வது இடத்தை பிடித்துள்ளார். போர்ப்ஸ் பட்டியலில் இடம்பிடித்துள்ள ஒரே தென்னிந்திய நடிகை நயன்தாரா தான். இந்த பட்டியலில் ஏ.ஆர். ரஹ்மான் ரூ. 66.75 கோடியுடன் 11வது இடத்திலும், ரூ. 50 கோடியுடன் ரஜினி 14வது இடத்திலும் உள்ளனர்.
விக்ரம்
ரூ. 30.33 கோடி வருவாயுடன் விஜய் 26வது இடத்திலும், ரூ. 26 கோடி வருவாயுடன் விக்ரம் 29வது இடத்திலும், ரூ. 23.67 கோடியுடன் சூர்யா 34வது இடத்திலும், ரூ. 23.67 கோடியுடன் விஜய் சேதுபதி 34வது இடத்திலும், ரூ. 17.25 கோடியுடன் தனுஷ் 53வது இடத்திலும் உள்ளனர்.