போர்ப்ஸ் பிரபலங்கள் பட்டியலில் விஜய், அஜீத், ரஜினியை முந்திய ஏ.ஆர்.ஆர்., ஏ.ஆர்.எம்.
சென்னை: போர்ப்ஸ் இந்தியா பத்திரிக்கை வெளியிட்டுள்ள டாப் 100 பிரபலங்கள் பட்டியலில் விஜய், அஜீத், ரஜினியை ஏ.ஆர்.ரஹ்மான் முந்தியுள்ளார்.
போர்ப் இந்தியா பத்திரிக்கை டாப் 100 பிரபலங்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. பிரபலங்களின் வருமானம் மற்றும் அவர்கள் எவ்வளவு பிரபலமாக உள்ளனர் என்பதன் அடிப்படையில் இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் பாலிவுட் பிரபலங்கள் அதிக இடங்களை பிடித்துள்ளனர்.

சல்மான் கான்
போர்ப்ஸ் இந்தியா பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளவர் பாலிவுட் நடிகர் சல்மான் கான். இரண்டாவது இடத்தில் அமிதாப் பச்சன், 3வது இடத்தில் ஷாருக்கான, 4வது இடத்தில் கிரிக்கெட் வீரர் டோணி, 5வது இடத்தில் அக்ஷய் குமார், 6வது இடத்தில் கோஹ்லி, 7வது இடத்தில் ஆமீர் கான் ஆகியோர் உள்ளனர்.

மகேஷ்பாபு
போர்ப்ஸ் பட்டியலில் தெலுங்கு திரை உலக பிரின்ஸ் மகேஷ்பாபு 30வது இடத்தில் உள்ளார். பவர் ஸ்டார் பவன்கல்யாண் 74வது இடத்தில் உள்ளார்.

ரஹ்மான்
போர்ப்ஸ் பட்டியலில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் 13வது இடத்தில் உள்ளார். இளையதளபதி விஜய்க்கு 41வது இடம் கிடைத்துள்ளது.

ரஜினி, அஜீத்
ரஜினிகாந்த் போர்ப்ஸ் பட்டியலில் 45வது இடத்திலும், அஜீத் 51வது இடத்திலும், தனுஷ் 78வது இடத்திலும் உள்ளனர். அதே சமயம் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸுக்கு 39வது இடம் கிடைத்துள்ளது.


Click it and Unblock the Notifications











