ஃபாரின்காரர்களும் ரசிக்கும் மகாராஜா படம்.. ரீச் எங்கேயோ போய்டுச்சே ப்பா.. செம விஷயம்
சென்னை: விஜய் சேதுபதி தமிழ் மற்றும் ஹிந்தியில் மிகச்சிறந்த நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். நடித்தால் ஹீரோவாக மட்டும்தான் நடிப்பேன் என்று அடம் பிடிக்காமல் கதைக்கு தேவைப்பட்டால் வில்லனாகவும் நடித்தார். ஆனாலும் அவர் தொடர்ந்து ஹீரோவாக மட்டும்தான் நடிக்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் கோரிக்கை வைத்ததை அடுத்து மகாராஜா படத்தில் ஹீரோவாக நடித்தார். அந்தப் படத்தை நித்திலன் சுவாமிநாதன் இயக்கியிருந்தார். படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது.
சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் தலை காட்டியவர் விஜய் சேதுபதி. பிறகு சீனு ராமசாமி இயக்கிய தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். முதல் படமே சூப்பர் ஹிட்டடித்து விஜய் சேதுபதியின் நடிப்புக்கும் நல்ல பெயர் கிடைத்தது. அப்படிப்பட்ட சூழலில் நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் பங்கேற்ற கார்த்திக் சுப்புராஜ், நலன் குமாரசாமி, பாலாஜி தரணிதரன் உள்ளிட்டோர் சினிமாவுக்குள் வந்தனர். அவர்களின் ஒரே சாய்ஸாக இருந்தது விஜய் சேதுபதிதான்.

வரிசை ஹிட்: 2010 ஆரம்பத்திலிருந்து கிட்டத்தட்ட 2016ஆம் ஆண்டு வரை விஜய் சேதுபதியின் கிராஃப் உச்சத்தில் இருந்தது. நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், பீட்சா, சூதுகவ்வும், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என அவர் நடித்த படங்கள் வரிசையாக ஹிட்டடித்தன. முக்கியமாக ஒவ்வொரு படத்திலும் தனது நடிப்பில் வெரைட்டியை காண்பித்தார் சேது. இதனால் அவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் சேர்ந்தது.
வில்லன்: நடித்தால் ஹீரோவாக மட்டும்தான் நடிப்பேன் என்று அடம் பிடிக்காமல் வில்லனாகவும் நடித்தார். பேட்ட, மாஸ்டர், விக்ரம், ஜவான் என அவர் வில்லனாக நடித்த படங்களிலும் அசால்ட்டாக ஸ்கோர் செய்தார். இதற்கிடையே ஃபர்ஸி வெப் சீரிஸிலும் நடித்து அட்டகாசம் செய்திருந்தார். ஃபர்ஸி, ஜவான் மூலம் ஹிந்தியிலும் கவனம் ஈர்த்த அவர் கடைசியாக மெரி கிறிஸ்துமஸ் படத்தில் நடித்தார்.
இனி ஹீரோதான்: மெரி கிறிஸ்துமஸ் திரைப்படம் கடந்த வருடம் டிசம்பர் 12ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த சூழலில் இனி ஹீரோவாக மட்டும்தான் நடிப்பேன் என்று ஓபன் ஸ்டேட்மெண்ட் கொடுத்துவிட்டார் விஜய் சேதுபதி. எனவே அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். மேலும் அண்மையில் அவர் ஹீரோவாக நடித்த மகாராஜா படம் மிகப்பெரிய ஹிட்டடித்தது.
செம ஃபெர்பார்மன்ஸ்: முக்கியமாக படத்தின் திரைக்கதையை நான் லீனியரில் அமைத்து அசத்தியிருந்தார் இயக்குநர் நித்திலன். மேலும் விஜய் சேதுபதி, நட்டி, சிங்கம்புலி, அருள்தாஸ் என பலரும் தங்களது நடிப்பை மிகச்சிறப்பாக வெளிப்படுத்தியிருந்தனர். விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் மகாராஜாவுக்கு செம ரெஸ்பான்ஸ் கிடைத்தது.
வெளிநாட்டு ரசிகர்கள்: படமானது அண்மையில் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. தியேட்டரில் கிடைத்த ரெஸ்பான்ஸ் போலவே ஓடிடியிலும் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்தது. இப்போது அதற்கெல்லாம் முத்தாய்ப்பாக வெளிநாட்டு ரசிகர்களின் கொண்டாட்டத்துக்கு உரிய படமாக மாறியிருக்கிறது மகாராஜா. அதாவது நெட்ஃப்ளிக்ஸ் தனது முகநூல் பக்கத்தில் மகாராஜா படத்தின் போஸ்டரை பதிவிட்டிருந்தது. அந்த போஸ்ட்டில் பல வெளிநாட்டுக்காரர்கள் மகாராஜா படம் சிறந்த படம் என புகழ்ந்து தள்ளிவிட்டனர்.ஒரு தமிழ் படத்துக்கு இவ்வளவு பெரிய ஆதரவு வெளிநாட்டுக்காரர்களிடமிருந்து கிடைத்திருப்பது அரிதிலும் அரிது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











