மாஸ்டர் சாம்ராஜ்யம்.. குட்டி ஸ்டோரி பாட்டுக்கு வெளிநாட்டு மாணவர்கள் கொடுக்கும் ரியாக்ஷனை பாருங்க!
Recommended Video
சென்னை: தளபதி விஜய்யின் ஐசி வாய்ஸில் வெளியான மாஸ்டர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் 'குட்டி ஸ்டோரி' பாடலை தாய்லாந்து மாணவர்கள் ரசித்துப் பார்க்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
மாஸ்டர் படத்தின் இசையமைப்பாளர் அனிருத், தற்போது, அந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.
15 மில்லியன் வியூக்களை கடந்துள்ள குட்டி ஸ்டோரி பாடல், உலகளவில் டிரெண்டாகி வரும் நிலையில், இப்படியொரு வீடியோ விஜய் ரசிகர்கள் மற்றும் மாஸ்டர் படக் குழுவினருக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.

தாய்லாந்து பள்ளியில்
நண்பன் படத்தில் மாணவனாக நடித்த விஜய், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் மாஸ்டர் படத்தில் ஆசிரியராக நடித்துள்ளார். மாணவர்களுக்கு அட்வைஸ் செய்யும் விதமாக உருவாகி உள்ள குட்டி ஸ்டோரி பாடல், உலகளவில் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், தாய்லாந்தில் உள்ள ஒரு பள்ளியில், அந்த பாடலை திரையிட்டுள்ளனர்.
வேற லெவல் ரெஸ்பான்ஸ்
ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழி கலந்து, அருண்ராஜா காமராஜ் வரிகளில், அனிருத் இசையில், விஜய் பாடியுள்ள குட்டி ஸ்டோரி பாடலை கேட்கும், தாய்லாந்து பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவிகள், அந்த பாட்டுக்கு, தங்கள் தலையை அசைத்து, வேற லெவல் ரெஸ்பான்ஸ் கொடுத்துள்ளனர். இந்த வீடியோவை அனிருத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வைரலாக்கி வருகிறார்.
மாஸ்டர் சாம்ராஜ்யம்
விஜய் - விஜய்சேதுபதி நடிப்பில் மெர்சலாக உருவாகி வரும் மாஸ்டர் திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் திரைக்கு வரவிருக்கிறது. மாநகரம், கைதி படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ், இந்த படத்தை இயக்கி வருகிறார். காதலர் தினத்தன்று வெளியான குட்டி ஸ்டோரி பாடல், உலகளவில் டிரெண்டாகி வருவதை அறிந்த விஜய் ரசிகர்கள் வேர்ல்ட் வைட் மாஸ்டர் சாம்ராஜ்யம் தான் என கமெண்ட் செய்து வருகின்றனர்.
அப்போ கொலவெறி.. இப்போ குட்டி ஸ்டோரி
தனுஷ் - அனிருத் காம்போவில் தங்க்லீஷ் பாடலாக வெளியான ஒய் திஸ் கொலவெறி டி பாடல் உலகளவில் டிரெண்டானது. இந்நிலையில், தற்போது, விஜய் - அனிருத் காம்போவில் தமிழ் மற்றும் ஆங்கிலம் கலந்து உருவாகி உள்ள குட்டி ஸ்டோரி பாடல் வெளிநாடுகளிலும் டிரெண்ட் ஆகி வருகிறது என விஜய் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
சார்ட் பஸ்டர்
மாஸ்டர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான குட்டி ஸ்டோரி பாடலில், அரசியல் ரீதியாக ஏகப்பட்ட உள்குத்துகள் இருந்தாலும், மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் தேவையான பாசிட்டிவ் கருத்துகள் நிறைந்திருக்கின்றன. அதனால், தான் இந்த பாடலை உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இது வேற லெவல் வெறித்தனம் என இந்த ரசிகர் கமெண்ட் செய்துள்ளார்.
ரூலிங் ஆல் ஓவர்
மாஸ்டர் சாம்ராஜ்யம் உலகளவில் டிரெண்டாகி வருகிறது என்றும், ரூலிங் ஆல் ஓவர் என்றும் தளபதி ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும், அடுத்த ஹாஷ்டேக் டிரெண்டிங்குக்கு கன்டென்ட் கிடைச்சிடுச்சு, இதையும் டிரெண்ட் பண்ணுங்க என விஜய் ரசிகர்கள் கமெண்ட் செக்ஷனை தெறிக்க விட்டு வருகின்றனர்.
டிக் டாக்கிலும் தெறிக்குது
தாய்லாந்து பள்ளியில் மட்டுமின்றி, டிக் டாக் பிரபலங்கள் மத்தியிலும், மாஸ்டர் படத்தின் குட்டி ஸ்டோரி பாடல் வைரலாகி வருகிறது. இளம் பெண்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் பள்ளி மாணவர்களிடையே பாசிட்டிவ் வைப்ரேஷனை உண்டு செய்யும் விதமாக உள்ள குட்டி ஸ்டோரி பாடல் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











