சூப்பர்ஸ்டாரை யாருக்குதான் பிடிக்காது.. வைரலாகும் வெளிநாட்டு இளைஞரின் பேட்டி!

சென்னை : ரஜினிகாந்த் இந்திய அளவில் மட்டுமில்லாமல் சர்வதேச அளவிலும் அதிகமான ரசிகர்களை பெற்றவர்.

இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் வெளிநாடுகளிலும் அதிகமாக ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன.

குறிப்பாக ரஜினிக்கு ஜப்பானில் அதிகமான ரசிகர்கள் காணப்படுகின்றனர். இவரது முத்து படம் ஜப்பானிய ரசிகர்களின் எவர்கிரீன் பேவரைட் படமாக தற்போதும் உள்ளது.

நடிகர் ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த் சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்களை பெற்றவர். தன்னுடைய கேரியரை வில்லனாக துவக்கி, தொடர்ந்து கேரக்டர் ரோல்களில் கவனம் ஈர்த்து தற்போது நாயகனாகவும், சூப்பர்ஸ்டாராகவும் மாறியுள்ளார். 70 வயதை தாண்டிய நிலையிலும் ரசிகர்களிடம் அதே கிரேஸ் இவருக்கு காணப்படுகிறது.

அண்ணாத்த படம்

அண்ணாத்த படம்

கடந்த ஜனவரி மாதத்தில் ரஜினியின் அண்ணாத்த படம் ரிலீசானது. அந்தப் படத்தின் ரிலீசின்போது வெளிநாட்டினரும் படம்குறித்து விமர்சனங்களை வைத்திருந்தனர். அப்போது ஜப்பானை சேர்ந்த ஒரு ரசிகரிடம் அவருக்கு பிடித்த ரஜினி படம் குறித்து கேட்கப்பட்டது. அப்போது அவர் முத்துதான் தனக்கு பிடிக்கும் என்று தெரிவித்திருந்தார்.

ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த்

ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த்

ரஜினியை ரசிகர்கள் அதிகமாக கொண்டாடி வருகின்றனர். தலைவர் என்றும் சூப்பர்ஸ்டார் என்றும் அவரை அழைத்து தங்களது அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர். தற்போது ஜெயிலர் படத்தில் கமிட்டாகியுள்ளார் ரஜினிகாந்த். இந்தப் படத்தின் டெஸ்ட் சூட் நேற்றைய தினம் துவங்கியுள்ள நிலையில், வரும் 15ம் தேதி அல்லது 22ம் தேதி படத்தின் சூட்டிங்கில் ரஜினி இணையவுள்ளார்.

ரஜினியை யாருக்குத்தான் பிடிக்காது?

ரஜினியை யாருக்குத்தான் பிடிக்காது?

சர்வதேச அளவில் ரஜினி ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ள நிலையில், தற்போது அதை நிரூபிக்கும் வகையில் மேலும் ஒரு நிகழ்வு ஏற்பட்டுள்ளது. ஆரோவில்லில் வாழ்ந்துவரும் வெளிநாட்டு இளைஞர் ஒருவர் தற்போது தனக்கு நடிகர் ரஜினிகாந்தைதான் பிடிக்கும் என்றும் அவரை யாருக்குத்தான் பிடிக்காது என்றும் கேட்டுள்ளார்.

 குஷ்பூவை பிடிக்கும்

குஷ்பூவை பிடிக்கும்

மேலும் தனக்கு பிரபுதேவா மற்றும் குஷ்பூவையும் பிடிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். தான் இறுதியாக விஜய் படத்தைதான் பார்த்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து நெதர்லாந்து, பிரான்ஸ் என பல நாடுகளுக்கு சென்றாலும் தனக்கு இந்தியாதான் மனதிற்கு நெருக்கமாக அமைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Recommended Video

நடிகர் Rajinikanth தமிழ்நாடு Governorஐ சந்தித்தது ஏன்? *Politics | Oneindia Tamil
ஸ்பை த்ரில்லர் படம்

ஸ்பை த்ரில்லர் படம்

ரஜினியின் ஜெயிலர் படம் ஸ்பை த்ரில்லராக உருவாகவுள்ளது. இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராய், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட நடிகர்கள் கமிட்டாகியுள்ளனர். படத்தின் சூட்டிங் குறித்து எந்த அப்டேட்டும் இல்லாமல் இருந்த நிலையில், நேற்றைய தினம் சூட்டிங் துவங்கியுள்ளதாக முன்னதாக ரம்யா கிருஷ்ணன் அப்டேட் தெரிவித்திருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X