twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஈஸ்வரன்' பாம்பு பிரச்னை.. சுசீந்திரனின் விளக்கத்தை ஏற்றுக்கொண்ட வனத்துறை.. என்னமா பண்றாங்க!

    By
    |

    சென்னை: சிம்புவின் ஈஸ்வரன் படத்தில் ரப்பர் பாம்பையே பயன்படுத்தியதாக அளித்த விளக்கத்தை வனத்துறை ஏற்றுக்கொண்டது.

    சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம், ஈஸ்வரன். இதன் ஷூட்டிங் முடிந்துவிட்டது.

    கிராமத்துப் பின்னணியில் இந்தப் படம் உருவாகி உள்ளது. இதில் பாரதிராஜா முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

    நந்திதா ஸ்வேதா

    நந்திதா ஸ்வேதா

    நிதி அகர்வால் ஹீரோயின். மற்றொரு ஹீரோயினாக நந்திதா ஸ்வேதா நடிக்கிறார். பால சரவணன், முனீஷ்காந்த் உட்பட பலர் நடிக்கின்றனர். திரு ஒளிப்பதிவு செய்கிறார். தமன் இசை அமைக்கிறார். இந்தப் படத்துக்காக சிம்பு உடல் எடையைக் குறைத்து ஸ்லிம் ஆகி இருக்கிறார்.

    வனத்துறை சந்தேகம்

    வனத்துறை சந்தேகம்

    இந்தப் படத்துக்காக, பாம்பு ஒன்றை சிலம்பரசன் பிடித்து இருப்பது போன்ற வீடியோ காட்சி சமீபத்தில் வெளியானது. அதில் ஒரிஜினல் பாம்பை வைத்தே படமாக்கப்பட்டதாக வனத்துறைக்கு சந்தேகம் எழுந்தது. இதையடுத்து வன அதிகாரிகள் படக் குழுவினருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினர்.

    எவ்வளவு நுணுக்கம்

    எவ்வளவு நுணுக்கம்

    இயக்குநர் சுசீந்திரன், வனதுறை அதிகாரி கிளமண்ட் எடிசனிடம் நேரில் சென்று, விளக்கம் அளித்தார். ரப்பர் பாம்பை வைத்து, எவ்வளவு நுணுக்கமாக தத்ரூபமாக படமாக்கினோம் என்பதை, கிராபிக்ஸ் செய்யப்பட்ட வீடியோ காட்சிகளுடன் அவர் விளக்கினார். இதையடுத்து அவர்கள் அது ரப்பர் பாம்பு என்பதை நம்பினர்.

    கிராபிக்ஸ் ட்ரிக்

    கிராபிக்ஸ் ட்ரிக்

    இதுதொடர்பாக வன துறை அதிகாரி கிளமண்ட் எடிசன் கூறும்போது, பொதுவாக விலங்குகளை வைத்து படமாக்குவதற்கு வன துறையினரிடம் அனுமதி பெற வேண்டும். ஈஸ்வரன் படக்குழுவினர், ரப்பர் பாம்பை வைத்து கிராபிக்ஸ் துணையுடன் எப்படியெல்லாம் டிரிக் செய்தோம் என்று விளக்கினார்கள். ஆச்சரியமாக இருந்தது.

    ஆட்சேபனை இல்லை

    ஆட்சேபனை இல்லை

    அதை பார்த்த பின்பு தான், அது நிஜ பாம்பு இல்லை என்று புரிந்தது. இந்த காட்சி எடுத்தது குறித்து எங்களுக்கு எந்த வித ஆட்சேபனையும் இல்லை என்றார். இந்தப் படத்தை, மாதவ் மீடியா சார்பில் பாலாஜி கப்பா தயாரிக்கிறார். ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில், 'டி' கம்பெனி சார்பில் கே.வி.துரை தயாரிக்கிறார்.

    English summary
    The Forest department has given a clean chit to Simbu's upcoming film Eeswaran after the director Suseenthiran met the officials and explained them the snake issue.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X