பொள்ளாச்சி குற்றவாளிகளுக்கு மரண தண்டனை கூடாது: ஞானவேல்ராஜாவின் மனைவி
Recommended Video

சென்னை: பொள்ளாச்சி குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கக் கூடாது என்று தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவின் மனைவி தெரிவித்துள்ளார்.
பொள்ளாச்சியில் 200 பெண்களை 20 பேர் கொண்ட கும்பல் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்துள்ளது. இவ்வளவு பெரிய பயங்கரம் நடந்தும் தேசிய ஊடகங்கள் கண்ணை மூடிக் கொண்டு இருக்கின்றன.
200 பெண்களின் வாழ்க்கை நாசமானது அவர்களுக்கு பெரிதாக தெரியவில்லை. இந்நிலையில் அந்த குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று ஆளாளுக்கு பரிந்துரை செய்கிறார்கள்.

சுட்டுக் கொல்லுங்கள்
அந்த 20 பேரையும் தூக்கிலிட வேண்டும் என்றும், சுட்டுக் கொல்ல வேண்டும் என்றும் பலரும் பரிந்துரை செய்து வருகிறார்கள். சிலரோ தெறி படத்தில் விஜய் செய்தது போன்று தண்டனை அளிக்க வேண்டும் என்கிறார்கள். இந்நிலையில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவின் மனைவி நேஹா ஒரு பரிந்துரை செய்துள்ளார்.
நேஹா
பலாத்காரம் செய்தவர்களுக்கு மரண தண்டனை வழங்கக் கூடாது. அவர்களின் ஆண்மையை நீக்கி, குருடாக்கி, தனி அறையில் அடைத்துவைத்து அவர்களின் மனநிலைமையே மோசமடைய செய்தால் எப்படி இருக்கும் என்று ட்வீட் செய்துள்ளார் நேஹா.
சின்மயி
பொள்ளாச்சி விவகாரம் பக்கம் கவனத்தை திருப்ப வேண்டும் என்று பாடகி சின்மயி டெல்லி மீடியாவை கேட்டுக் கொண்டுள்ளார்.
#PollachiAssaultCase #PollachiSexualAbuse

பெண்கள்
பொள்ளாச்சி சம்பவம் குறித்து அறிந்தும் லோக்சபா தேர்தல் வேலையில் பிசியாக இருப்பாதல் தேசிய ஊடகங்கள் அதை கண்டுகொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











