twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விஜய்யின் 'மாஸ்டரு'க்கு வெளிநாடுகளில் வரவேற்பு எப்படி? நன்றி சொன்ன விநியோக நிறுவனம்!

    By
    |

    சென்னை: மாஸ்டர் படத்துக்கு வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதாக அந்த படத்தை வெளியிட்டுள்ள நிறுவனம் தெரிவித்து உள்ளது.

    கொரோனா பரவல் காரணமாக ரிலீஸ் தள்ளி போன 'மாஸ்டர்' படம், 13 ஆம் தேதி ரிலீஸ் ஆனது.

    இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். விஜய் கல்லூரி பேராசிரியராக நடித்துள்ளார்.

    அதிக எதிர்பார்ப்பு

    அதிக எதிர்பார்ப்பு

    விஜய் சேதுபதி வில்லனாகவும் மாளவிகா மோகனன் ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். விஜய் சேதுபதி வில்லன் கேரக்டரில் நடித்துள்ளார். நடிகை, ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜுன் தாஸ் உட்பட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையில் பாடல்கள் ஹிட்டாகியுள்ளன. கொரோனாவுக்கு பிறகு வெளியாகும் முதல், பெரிய ஹீரோ படம் 'மாஸ்டர்' என்பதால், இந்த படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.

    ஹம்சினி என்டர்டெயின்மென்ட்

    ஹம்சினி என்டர்டெயின்மென்ட்

    தமிழில் வரவேற்பை பெற்றுள்ள இந்த படம் முதல் நாளில் ரூ.26 கோடி வசூல் செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. தமிழகத்தைப் போலவே, வெளிநாடுகளிலும் இந்தப் படம் வரவேற்பை பெற்றுள்ளதாக, இந்தப் படத்தை அங்கு வெளியிட்டுள்ள, ஹம்சினி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    திரையரங்குகள்

    திரையரங்குகள்

    இந்த நிறுவனம் இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளின் மாஸ்டர் படத்தை வெளியிட்டுள்ளது. இந்த நிறுவனத்தைச் சேர்ந்த விவேக் ரவிச்சந்திரன் கூறும்போது, 'ஐரோப்பிய நாடுகளில் இன்னும் திரையரங்குகள் திறக்கப்படவில்லை. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் மாஸ்டரை வெளியிட்டோம்.

    முதல் நாள் வசூல்

    முதல் நாள் வசூல்

    படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அமெரிக்காவில் 30 சதவிகித இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி. அங்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் எந்த தென்னிந்தியப் படமும் பண்ணாத முதல் நாள் வசூலை மாஸ்டர் செய்துள்ளது. எங்களது நிறுவனம் மீது நம்பிக்கை வைத்து வெளிநாட்டு உரிமையை வழங்கிய லலித் குமாருக்கு நன்றி என்று கூறியுள்ளார்.

    English summary
    Hamsini Entertainment, which released vijay's Master abroad, said that the film has been well-received.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X