பிரபல நடிகைக்கு கூகுளில் வேலை: என்ன வேலை தெரியுமா?
மும்பை: முன்னாள் நடிகை மயூரி காங்கோ கூகுள் இந்தியா நிறுவனத்தில் உயர் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
15 வயதில் இந்தி படங்களில் நடிக்கத் துவங்கியவர் மயூரி காங்கோ. அவருக்கு ஐஐடி கான்பூரில் சீட் கிடைத்தும் படங்களில் நடிக்க வேண்டி அதை ஏற்கவில்லை. அவர் அஜய் தேவ்கன், அனுபம் கேர், ராணி முகர்ஜி உள்ளிட்டோருடன் சேர்ந்து நடித்துள்ளார்.
படங்கள் தவிர்த்து இந்தி தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

திருமணம்
10 ஆண்டுகளுக்கும் மேல் நடித்துக் கொண்டிருந்தவர் வெளிநாடு வாழ் இந்தியரான ஆதித்யா தில்லனை கடந்த 2003ம் ஆண்டு டிசம்பரம் மாதம் திருமணம் செய்து அமெரிக்காவில் செட்டில் ஆனார். அமெரிக்கா சென்ற இடத்தில் அவர் எம்.பி.ஏ. படித்துவிட்டு 360ஐ என்கிற டிஜிட்டல் ஏஜென்சியில் சேர்ந்து துணை மீடியா மேனேஜராக வேலை பார்த்தார்.

இந்தியா
2004ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டு வரை மயூரி அமெரிக்காவில் வேலை செய்தார். மகன் பிறந்த பிறகு அவர் சொந்த நாட்டிற்கு திரும்பி வந்து குர்காவ்னில் செட்டில் ஆகிவிட்டார். அவர் வேலை தொடர்பாக மும்பை, பெங்களூருக்கு அடிக்கடி பயணம் செய்கிறார்.

கூகுள் இந்தியா
நடிப்பை நிறுத்திவிட்டாலும் மயூரியின் படிப்பு அவருக்கு கை கொடுத்துள்ளது. டிஜிட்டல் விளம்பர பிரிவில் அவர் தனக்கென்று ஒரு பெயரை உருவாக்கியுள்ளார். இந்நிலையில் அவருக்கு கூகுள் இந்தியாவின் விளம்பர பிரிவின் தலைவர் பதவி கிடைத்துள்ளது.

ரசிகர்கள்
சினிமாவை விட்டு விலகிய மயூரிக்கு கூகுள் இந்தியாவில் வேலை கிடைத்திருப்பது அறிந்து திரையுலகினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











