துப்பாக்கியால் சுட்டு.. ஒருவரைக் கொன்று புதைத்த வழக்கு.. பிரபல பாலியல் பட நடிகை அதிரடி கைது!
ஹூஸ்டன்: பாலியல் படங்களில் நடித்து வந்த நடிகை, ஒருவரை கொலை செய்த குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
Recommended Video
அமெரிக்காவில் உள்ள புளோரிடா பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவர், கடந்த சில மாதங்களுக்கு முன் போலீசில் ஒரு புகார் கொடுத்தார்.
அதில், தான் கல்லியன் என்பவருடன் ஒன்றாகத் தங்கி இருப்பதாகவும் தன்னை பார்க்கர் என்பவர் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதாகவும் புகார் கூறினார்.

கொல்லப்பட்டு இருக்கலாம்
போலீசார் இதுகுறித்து விசாரித்து கொண்டிருந்தனர். இந்நிலையில் கடந்த ஒரு மாதத்துக்கு முன் போலீசுக்கு வந்த அந்த பெண், தன்னுடன் தங்கி இருந்த கல்லியனை காணவில்லை என்று அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று சந்தேகப்படுவதாகவும் ஆனால் உறுதிப்படுத்தப் பட முடியவில்லை என்றும் கூறினார். அதிர்ச்சி அடைந்த போலீசார் அவரை தேடி வந்தனர்.

அவசரம் அவசரமாக
இந்நிலையில் ஜூலை 4 ஆம் தேதி பீட்டர் என்பவர் வீட்டில் கல்லியனைப் பார்த்ததாகச் சிலர் தெரிவித்தனர். இந்நிலையில் ஆகஸ்ட் 24 ஆம் தேதி அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று போலீசுக்கு வந்த தகவலை அடுத்து பீட்டர் வீட்டுக்குச் சென்றனர். அவர் வீட்டுக்கு அருகில் உள்ள கல்லறை ஒன்றில் அதிக ஆழத்தில் இல்லாமல், அவசரம் அவசரமாக ஒரு உடல் புதைக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது.

துப்பாக்கிக் குண்டு
அதை தோண்டி எடுத்து பார்த்தபோது, அவர் கல்லியன் உடல் என்பது தெரியவந்தது. அவர் உடலில் துப்பாக்கிக் குண்டு காயங்கள் இருந்துள்ளன. அவர் போதைபொருள் மற்றும் பண விவாகரம் தொடர்பாகச் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். அவருக்கு நன்றாக தெரிந்தவர்களே இந்த கொலையில் ஈடுபட்டுள்ளனர் என்றும் தெரிவித்தனர்.

பாலியல் பட நடிகை
இதையடுத்து இந்த வழக்கில் பிரபல முன்னாள் பாலியல் பட நடிகை லாரன் வாம்பல்ஸ், அவர் காதலர் வில்லியன் ஷேன் பார்க்கர், பீட்டர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். லாரன் வாம்பல்ஸ், சுமார் 30 பாலியல் படங்களில் நடித்துள்ளார். அதில் நடிப்பதற்காக, தனது பெயரை ஆப்ரே கோல்ட் என்று மாற்றி வைத்துள்ளார். பிறகு அந்த மாதிரி படங்களில் நடிப்பதை விட்டுவிட்டார். கொலை வழக்கில் பாலியல் பட நடிகை கைது செய்யப்பட்டிருப்பது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


Click it and Unblock the Notifications











