சிம்புவுடன் சேர்ந்து சிசிவி படம் பார்த்த மகத், ஐஸ்வர்யா, ரித்விகா, ஜனனி, ஹரிஷ்
Recommended Video

சென்னை: முன்னாள் பிக் பாஸ் 2 போட்டியாளர்கள் சிம்புவுடன் சேர்ந்து சத்யம் சினிமாஸில் செக்கச் சிவந்த வானம் படம் பார்த்துள்ளனர்.
மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சிம்பு, அரவிந்த்சாமி, அருண் விஜய், பிரகாஷ் ராஜ், ஜோதிகா, அதிதி உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 27ம் தேதி வெளியான செச்கச் சிவந்த வானம் படம் நல்ல வசூல் செய்து கொண்டிருக்கிறது.
படத்தில் பலர் இருந்தாலும் சிம்பு தனித்து தெரிகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனனி
மகத், ஹரிஷ் கல்யாண் மற்றும் முன்னாள் பிக் பாஸ் 2 போட்டியாளர்களான ஜனனி, ரித்விகா, ஐஸ்வர்யா ஆகியோர் சிம்புவுடன் சேர்ந்து சத்யம் சினிமாஸில் செக்கச் சிவந்த வானம் படத்தை நேற்று பார்த்துள்ளனர். அப்போது எடுத்த புகைப்படங்களை ஜனனி ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். உங்களின் அடுத்த படத்தின் ஹீரோயின் ஐஸ்வர்யா தானா சிம்பு? #Justasking
ஹரிஷ் கல்யாண்
நண்பர்கள் சிம்பு, ஹரிஷ் கல்யாண் ஆகியோருடன் சேர்ந்து படம் பார்த்தபோது தியேட்டரில் எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் மகத்.
சிசிவி
சிம்பு ரசிகனான மகத் செக்கச் சிவந்த வானம் படம் ரிலீஸான அன்று முதல் நாள் முதல் காட்சியை தியேட்டரில் ரசிகர்களுடன் பார்த்து ரசித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதுப்படம்
செக்கச் சிவந்த வானம் படத்தை அடுத்து சிம்பு சுந்தர் சி.யின் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். தெலுங்கில் ஹிட்டான அத்தாரின்டிகி தாரேதி படத்தின் ரீமேக் தான் இது. இந்த படத்தில் மேகா ஆகாஷ், கேத்ரீன் தெரசா என்று இரண்டு ஹீரோயின்கள் உள்ளனர். செக்கச் சிவந்த வானம் போன்றே இந்த படத்திற்கும் எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது.


Click it and Unblock the Notifications











