பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற இளம் நடிகை தூக்கிட்டு தற்கொலை.. ரசிகர்கள் அதிர்ச்சி!

பெங்களூரு: கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற இளம் நடிகை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எண்டோமால் ஷைன் நிறுவனம் மூலம் தயாரிக்கப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சி, இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது.

15க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் ஒரே வீட்டுக்குள் 100 நாட்களுக்கு மேல் வெளி உலகத்துடன் எந்த தொடர்பும் இன்றி இருக்க வேண்டும்.

நடிகை தற்கொலை

நடிகை தற்கொலை

தமிழில் ஒரு வாரத்திற்கு முன்புதான் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி நிறைவு பெற்றது. இந்நிலையில் கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் போட்டியாளரும் இளம் நடிகையுமான ஜெயஸ்ரீ ராமய்யா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூக்கில் தொங்கிய நிலையில்

தூக்கில் தொங்கிய நிலையில்

ஜெயஸ்ரீ தனது வீட்டில் உள்ள அறையில் தூக்கில் தொங்கியப்படி சடலமாக இன்று பகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். மனச்சோர்வுடன் போராடிய ஜெயஸ்ரீ ஞாயிற்றுக்கிழமை இரவு தற்கொலை செய்து கொண்டார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

திரைத்துறையினர் அதிர்ச்சி

திரைத்துறையினர் அதிர்ச்சி

ஜெயஸ்ரீயின் இயற்கைக்கு மாறான மரணம் கன்னட திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரபலங்கள் பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகை ஜெயஸ்ரீ ரசிகர்கள் மற்றும் அவரது நலம் விரும்பிகள் மத்தியில் ஒரு எச்சரிக்கையை ஏற்கனவே ஏற்படுத்தியிருந்தார்.

டிப்ரஷனுக்கு குட்பை

டிப்ரஷனுக்கு குட்பை

ஜூலை 22, 2020 அன்று நடிகை தனது பேஸ்புக் கணக்கில் ஒரு பதிவை பகிர்ந்து கொண்டார், "நான் வெளியேறினேன். இந்த உலகத்திற்கும் மனச்சோர்விற்கும் குட்பை" என பதிவிட்டிருந்தார். ஜெயஸ்ரீயின் இந்த பதிவு நெட்டிசன்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

உடனடியாக நீக்கம்

உடனடியாக நீக்கம்

இருப்பினும், ஜெயஸ்ரீ தனது அந்த பதிவை உடனடியாக நீக்கிவிட்டு, "நான் நன்றாக இருக்கிறேன், பாதுகாப்பாக இருக்கிறேன்!! உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன்" என்று ஒரு புதிய பதிவை ஷேர் செய்தார்.

மரணத்தை எதிர்பார்க்கிறேன்

மரணத்தை எதிர்பார்க்கிறேன்

இந்நிலையில் மீண்டும் ஜூலை 25 ஆம் தேதி, ஜெயஸ்ரீ தனது சமூக வலைதள பக்கத்தில் 'லைவ்' சென்று, "நான் இதையெல்லாம் விளம்பரத்திற்காக செய்யவில்லை. சுதீப் சாரிடமிருந்தும் நான் நிதி உதவியை எதிர்பார்க்கவில்லை. நான் என் மரணத்தை மட்டுமே எதிர்பார்க்கிறேன். என் மனச்சோர்வை எதிர்த்துப் போராட முடியவில்லை.

வெல்ல முடியவில்லை

வெல்ல முடியவில்லை

நான் பண ரீதியாக வலுவானவள், ஆனால் டிப்ரஷனில் உள்ளேன். நான் நிறைய தனிப்பட்ட பிரச்சினைகளைச் சந்தித்து வருகிறேன். குழந்தை பருவத்திலிருந்தே நான் நம்பிக்கை துரோகத்தை சந்தித்து வருகின்றேன். அதை என்னால் வெல்ல முடியவில்லை.

நான் ஒரு லூசர்

நான் ஒரு லூசர்

பேஸ்புக் பக்கத்தில் தனது 'லைவ்' அமர்வைத் தொடர்ந்து, ஜெயஸ்ரீ பேஸ்புக்கில் தனது சமீபத்திய பதிவை பற்றி பேசினார். மேலும் அவரைப் பற்றி மோசமாக கருத்து தெரிவிப்பதை நிறுத்துமாறு மக்களைக் கேட்டுக்கொண்டார். அவர் மேலும் கூறுகையில், "நான் ஒரு லூசர், என்னை கருணைக் கொலை செய்ய வேண்டும்" என்றும் பதிவிட்டிருந்தார்.

Recommended Video

அரண்மனை 3 என்னோட ஜோடி ANDREA | ACTOR AMIT BHARGAV CHAT P-03 | FILMIBEAT TAMIL
பெரும் அதிர்வலைகள்

பெரும் அதிர்வலைகள்

இந்நிலையில் இன்று தனது அறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார் ஜெயஸ்ரீ. ஜெயஸ்ரீ நேற்று இரவே தற்கொலை செய்து கொண்டாரா அல்லது இன்று காலை தற்கொலை செய்து கொண்டாரா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. ஜெயஸ்ரீயின் தற்கொலை கன்னட திரைத்துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X