சூர்யா படத்தில் இணைந்த பாஜக பிரபலம்... தமிழ்நாட்டு விஷயம் டெல்லிக்கு தெரியாது போலிருக்கே!
பிரபல இந்தி நடிகர் பரேஷ் ராவல் சூர்யா நடிக்கும் சூரரைப் போற்று திரைப்படத்தில் இணைந்துள்ளார்.
சென்னை: சூர்யா நடிக்கும் சூரரைப் போற்று திரைப்படத்தில் பிரபல இந்தி நடிகரும், முன்னாள் பாஜக எம்.பி.யுமான பரேஷ் ராவல் இணைந்துள்ளார்.
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்த என்ஜிகே திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. இதனால் கே.வி.ஆனந்த் இயக்கியுள்ள காப்பான் படத்தை தான் அவர் பெரிதும் நம்பியுள்ளார்.

காப்பான் திரைப்படம் ஆகஸ்ட் 30ம் தேதி வெளியாகவுள்ளது. சூர்யாவின் பிறந்தநாளையொட்டி, இம்மாதம் 23ம் தேதி இப்படத்தின் பாடல்கள் வெளியாகவுள்ளன.
இந்நிலையில் சூர்யாவின் அடுத்தப் படமான சூரரைப் போற்று திரைப்படத்தில் பிரபல இந்தி நடிகரும், முன்னாள் பாஜக எம்.பி.யுமான பரேஷ் ராவல் இணைந்துள்ளார் எனும் செய்தி வெளியாகியுள்ளது. பரேஷ் ராவல் ஒரு தேசிய விருது பெற்ற நடிகர். பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த பரேஷ் ராவல், 2014 - 2019 எம்பியாக பணியாற்றியவர்.
தேசிய கல்வி கொள்கை தொடர்பாக சூர்யா தெரிவித்த கருத்துக்கு, தமிழக பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அந்த கட்சியை சேர்ந்த ஒரு முன்னாள் எம்பி, அவருடைய படத்தில் இணைந்திருப்பது வியப்பான செய்தியாக கோலிவுட்டில் பேசப்படுகிறது.


Click it and Unblock the Notifications











