தோனியிடமிருந்து யோகி பாபு பெற்ற கிஃப்ட்.. ட்ரெண்டாகும் புகைப்படம்

சென்னை: பிரபல நகைச்சுவை நடிகர் யோகிபாபுவுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி பேட்டை பரிசாக அளித்திருக்கிறார்.

சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர் யோகிபாபு. ஆரம்பத்தில் சிறு சிறு வேடங்களில் நடித்துவந்த அவர் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். அவர் கையில் ஏராளமான படங்கள் இருக்கின்றன. இதனால் படு பிஸியாக நடித்து வருகிறார் யோகிபாபு.

ஹீரோவான யோகிபாபு

ஹீரோவான யோகிபாபு

நகைச்சுவை நடிகராக வலம் வந்த யோகிபாபு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான கோலமாவு கோகிலா படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். முதல் படமே லேடி சூப்பர் ஸ்டாருடன் ஹீரோவாக நடித்த யோகிபாபுவுக்கு கோலமாவு கோகிலா படமானது வரவேற்பைப் பெற்றது. இதனால் ஹீரோவாகவே தொடரலாம் என்று அவர் முடிவு செய்தாலும் நகைச்சுவை காட்சிகளிலும் அவர் நடித்து வருகிறார்.

கவனம் ஈர்த்த மண்டேலா திரைப்படம்

கவனம் ஈர்த்த மண்டேலா திரைப்படம்

ஹீரோவாக முதல் பட வெற்றிக்கு பிறகு மடோன் அஸ்வின் இயக்கத்தில் மண்டேலா படத்தில் கதாநாயகனாக நடித்தார் யோகிபாபு. வித்தியாசமான கதைக்களத்தைக்கொண்ட மண்டேலாவும் சூப்பர் ஹிட்டானது. குறிப்பாக படமான தேசிய விருதையும் வென்றது. இதனால் யோகிபாபு உற்சாகத்தின் உச்சத்துக்கே சென்றார்.

கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்ட யோகிபாபு

கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்ட யோகிபாபு

நடிப்பு மட்டுமின்றி கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுகளில் ஆர்வம் கொண்டவர் யோகிபாபு. அதுதொடர்பான வீடியோக்களும் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியாகும். மேலும், யோகிபாபுவுக்கு விஜய் கிரிக்கெட் பேட் ஒன்றை பரிசாக வழங்கினார். அதனை யோகிபாபுவும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து மகிழ்ச்சி தெரிவித்திருந்தார்.

தோனியிடமிருந்து யோகிபாபுவுக்கு சென்ற கிஃப்ட்

தோனியிடமிருந்து யோகிபாபுவுக்கு சென்ற கிஃப்ட்

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தான் பயன்படுத்திய பேட்டை தன்னுடைய கையெழுத்திட்டு யோகிபாபுவுக்கு பரிசாக வழங்கியிருக்கிறார். இதுகுறித்த புகைப்படத்தை யோகிபாபு தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அந்தப் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.

தோனி தயாரிப்பில் கமிட்டாகியிருக்கும் யோகிபாபு

தோனி தயாரிப்பில் கமிட்டாகியிருக்கும் யோகிபாபு

தோனி திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியிருக்கிறார். மேலும் தனது முதல் படமாக தமிழ் படத்தையும் அவர் தயாரிக்கிறார். அந்தப் படத்துக்கு லெட்ஸ் கெட் மேரிட் என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில் யோகிபாபு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். முன்னதாக அவரது நடிப்பில் பொம்மை நாயகி படம் திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X