கங்குலியின் வாழ்க்கை திரைப்படமாகிறது… அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் !
மும்பை : கங்குலியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமாக உருவாக உள்ளது.
Recommended Video
வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்திற்கு நீண்ட நாட்களாக சம்மதம் தெரிவிக்காத நிலையில் தற்போது படத்திற்கு அனுமதி அளித்துள்ளார்.
இயக்குனர், நடிகர், நடிகையர் விவரம் அதிகாரப்பூர்வமாக விரைவில் வெளியாகும் என்றார்.

வெற்றி பெறுகிறது
விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் வாழ்க்கை வரலாறு திரைப்படங்கள் கடந்த சில ஆண்டுகளாக உருவாக்கப்பட்டு வருகின்றன. அவை நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. இதையடுத்து பல இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க முன்வந்துள்ளனர்.

வெற்றி பெற்றன
அந்த வகையில் எம்எஸ் தோனி, சச்சின் டெண்டுல்கர், மேரிகோம், மிகா சிங்,சாய்னா நேவல்,கர்ணம் மல்லேஸ்வரி உள்பட பல விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் திரைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வெற்றியைப் பெற்றது.

டோனியின் வாழ்க்கை வரலாறு
டோனியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் சுஷாந்த் சிங் டோனி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதேபோல பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமும் அனைவரின் பாராட்டை பெற்றது. இதில்,சாய்னா நேவாலாக நடிகை ஷ்ரத்தா கபூர் நடித்திருந்தார்.

பயோபிக்
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவ்ரவ் கங்குலியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக உள்ளது. இந்த தகவலை பத்திரிக்கை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கங்குலி உறுதிப்படுத்தி உள்ளார். எனது வாழ்கை கதையை திரைப்படமாக எடுக்க ஒப்புதல் அளித்துள்ளேன் என்றார். படத்தின் இயக்குனர் யார், நடிகர், நடிகையர் விவரம் விரைவில் வெளியாகும் என்றும் கங்குலி கூறினார்.

பேச்சுவார்த்தை
இந்த தகவலை அடுத்து கங்குலி கதாபாத்திரத்தில் நடிக்க ரன்பீர் கபூருடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்றும் தகவல்கள் கசிந்துள்ளன.


Click it and Unblock the Notifications











