Yuvraj Singh: திரைப்படமாகிறது ஆல்-ரவுண்டர் யுவராஜ் சிங்கின் பயோ பிக்.. யார் ஹீரோவா நடிக்கப் போறாங்க?
சென்னை: இந்திய அணியின் ஆல்-ரவுண்டராக மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தவர் யுவராஜ் சிங். இந்திய அணியின் பல வெற்றி போட்டிகளில் இவரின் பங்கு மிகச் சிறப்பாக அமைந்திருந்தது. இந்திய அணி உலக கோப்பையை வெல்வதற்கும் இவர் காரணமாக அமைந்திருந்தார்.
இந்நிலையில் யுவராஜ் சிங்கின் பயோபிக் உருவாக உள்ளதாக இன்றைய தினம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவரது பயோபிக்கில் நடிக்க உள்ள நடிகர் குறித்து இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இந்நிலையில் இந்த பயோபிக் குறித்து யுவராஜ் சிங் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். தன்னுடைய பயோபிக் யாருக்காவது உத்வேகத்தை கொடுத்தால் தான் மகிழ்ச்சி அடைவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங்: இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங், அணியின் ஆல் ரவுண்டராக சிறப்பான ஆட்டத்தை வழங்கி சர்வதேச அளவில் இந்திய அணியின் பல வெற்றிகளுக்கு காரணமாக அமைந்தவர். சர்வதேச போட்டியொன்றில் ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர்களை அடித்தது இவரது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. கடந்த 2011ம் ஆண்டில் இந்திய அணி உலக கோப்பையை வெற்றி கொள்ள இவரும் முக்கியமான காரணமாக அமைந்தவர். இந்நிலையில் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு அதிலிருந்தும் மீண்டு வெளிவந்தவர் யுவராஜ் சிங். இந்நிலையில் யுவராஜ் சிங்கின் பயோபிக் திரைப்படமாக உருவாக உள்ளதாக இன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது.
யுவராஜ் சிங் பயோ-பிக்: இதுகுறித்து இன்றைய தினம் டீ சீரிஸ் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. முன்னதாக எம்எஸ் தோனி மற்றும் சச்சின் டெண்டுல்கரின் பயோபிக்குகள் திரைப்படமாக வெளியான நிலையில் அடுத்ததாக யுவராஜ் சிங்கின் பயோபிக் திரைப்படமாக உருவாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த படத்திற்கான ஷூட்டிங் துவங்க உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. எம்எஸ் தோனியின் பயோபிக் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து வெற்றி படமாக மாறிய நிலையில் சச்சின் டெண்டுல்கரின் பயோபிக் ரசிகர்களை அந்த அளவிற்கு கவர தவறியது.
யுவராஜ் சிங் மகிழ்ச்சி: இந்நிலையில் யுவராஜ் சிங்கின் பயோபிக் கண்டிப்பாக ரசிகர்களை அட்ராக்ட் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மிகப்பெரிய ஆல்ரவுண்டராக வலம்வந்த யுவராஜ் சிங், ஒரு கட்டத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்தும் போராடி மீண்டு வந்தவர். முன்னதாக தன்னுடைய பயோ பிக் எடுக்கப்பட்டால் அதில் சித்தாந்த் சதுர்வேதி தன்னுடைய கேரக்டரில் நடிக்க வேண்டும் என்று தன்னுடைய விருப்பத்தை யுவராஜ் சிங் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்றைய தினம் தன்னுடைய பயோபிக் குறித்து யுவராஜ் சிங் தன்னுடைய மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.

யார் நடிப்பார்கள்?: தன்னுடைய பயோபிக் யாருக்காவது உத்வேகத்தை அளித்தால் அது தனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை கொடுக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்திய அணியில் தோனியை தொடர்ந்து மிகப்பெரிய ஆல்-ரவுண்டராக ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர் யுவராஜ் சிங். இந்நிலையில் இவரது பயோபிக் கண்டிப்பாக ரசிகர்களை கவரும் என்று எதிர்பார்க்கலாம். முன்னதாக எம்எஸ் தோனி வாழ்க்கை வரலாற்று கதையிலும் யுவராஜ் சிங்கின் கேரக்டர் அமைக்கப்பட்டிருந்தது. படத்தில் சில காட்சிகளே இந்த கேரக்டர் வந்தபோதிலும் மிகவும் அழுத்தமாக அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் யுவராஜ் சிங்கின் பயோபிக் மிகப்பெரிய கவனத்தை பெற்றுள்ளது. இந்த கேரக்டரில் யார் நடிப்பார்கள் என்பது குறித்து இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. விரைவில் இது குறித்த அறிவிப்பை படக்குழுவினர் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கலாம். விரைவில் படத்தின் சூட்டிங் துவங்க உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











