அதுக்கு சரிபட்டு வருவாரா..? நெகட்டிவ் கேரக்டரில் மிரட்டப் போகிறாராமே அந்த முன்னாள் ஹீரோயின்!
சென்னை: பிரபல முன்னாள் ஹீரோயின் நெகட்டிவ் கேரக்டரில் நடிக்க இருக்கிறார்.
Recommended Video
தமிழில் விஜய் நடித்த பத்ரி, சசி இயக்கத்தில் ஶ்ரீகாந்த் நடித்த ரோஜா கூட்டம், சூர்யாவின் சில்லுனு ஒரு காதல் உட்பட பல படங்களில் நடித்தவர் பூமிகா.
சில்லுனு ஒரு காதல் படத்தில் சூர்யாவுடன் இவர் இடம்பெற்ற, முன்பே வா அன்பே வா என்ற பாடல் காட்சி இப்போதும் பலரது விருப்பமான பாடலாக இருக்கிறது.

கண்ணை நம்பாதே
தெலுங்கு மற்றும் மலையாளத்திலும் பல படங்களில் நடித்துள்ள பூமிகா, தனது காதலரும் யோகா ஆசிரியருமான பரத் தாகூரை 2007 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறான். திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இப்போது மாறன் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் கண்ணை நம்பாதே படத்தில் நடித்து வருகிறார்.

பாலகிருஷ்ணா
இதையடுத்து தெலுங்கில் ரவிதேஜாவின் சீட்டிமார் என்ற படத்திலும் நடிக்கிறார். இவர் இப்போது தெலுங்கு படத்தில் வில்லி கேரக்டரில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. பிரபல தெலுங்கு ஹீரோ பாலகிருஷ்ணா. சீனியர் ஹீரோவான இவர், இப்போது போயபதி ஶ்ரீனு இயக்கும் படத்தில் நடிக்கிறார்.

ஸ்ரேயா ஹீரோயின்
இந்தப் படத்துக்கு ஹீரோயின்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. முதலில் சோனாக்ஷி சின்ஹா நடிப்பதாகக் கூறப்பட்டது. கால்ஷீட் பிரச்னை காரணமாக, அவர் மறுத்துவிட்டார். இதையடுத்து கேத்தரின் தெரசா நடிப்பதாகக் கூறப்பட்டது. அதிக சம்பளம் கேட்டதால் அவரும் நடிக்கவில்லை என்றனர். இப்போது ஸ்ரேயா நடிக்கிறார்.

நெகட்டிவ் கேரக்டர்
இந்நிலையில், நடிகை பூமிகா, இந்தப் படத்தில் நெகட்டிவ் கேரக்டரில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. பூமிகா, பாலகிருஷ்ணாவின் ரூலர் படத்தில் ஏற்கனவே முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இதையடுத்து இதிலும் நடிக்க இருக்கிறார். அவர் நெகட்டிவ் கேரக்டரில் நடிப்பது இதுவே முதன்முறை என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











