பாக்யராஜ் நடித்த துணை முதல்வர் இசை வெளியீடு... மேடையில் குவிந்த முன்னாள் நாயகிகள்!
பாக்யராஜ் நீண்ட இடைவெளிக்கு பிறகு கதாநாயாகனாக நடிக்கும் துணை முதல்வர் படத்தின் இசையை மீனா, ராதிகா, பூர்ணிமா உள்ளிட்ட முன்னாள் கதாநாயகிகள் பலரும் வெளியிட்டு வாழ்த்தினர்.
துணை முதல்வர் படத்தை பாக்யராஜ் இயக்கவில்லை. நடிக்க மட்டும் செய்கிறார். இதில் ஜெயராமும் இன்னொரு நாயகனாக வருகிறார். ஸ்வேதாமேனன் நாயகியாக நடிக்கிறார். ரா.விவேகானந்தன் இயக்குகிறார். ஆர்.சங்கர், கே.ஜி.சுரேஷ்பாபு தயாரிக்கின்றனர்.

முன்னாள் நாயகிகள்
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று காலை ‘சத்யம்' தியேட்டரில் நடந்தது. இதில் முன்னாள் கதாநாயகிகள் மீனா, ஊர்வசி, ரோகிணி, சுகாசினி, ராதிகா, ரேகா, ஸ்ரீப்ரியா, பூர்ணிமா, வடிவுக்கரசி, கோவை சரளா ஆகிய பத்து பேர் பங்கேற்றனர். அவர்களே பாடல் சி.டி.யையும் வெளியிட்டனர். இவர்களில் சுகாசினி தவிர மற்ற அனைவருமே பாக்யராஜுடன் நடித்தவர்கள்.

தாய்க்குலத்துக்கே முதலிடம்
பாக்யராஜ் தன் படங்களை தாய்க்குலத்தை மனதில் வைத்தே எடுப்பது வழக்கம். அந்த சென்டிமென்ட் காரணமாக, இந்த முறை தன் படத்தின் இசை வெளியீட்டை நடிகைகளின் தலைமையில் வெளியிட்டார்.
பாண்டியராஜன்
இயக்குநர் பாண்டியராஜன் விழாவில் பங்கேற்று பேசும்போது, ‘‘சினிமாவில் ஆரம்ப காலத்தில் சாப்பாட்டுக்கே வழியின்றி கஷ்டப்பட்டேன். அதன் பிறகு பாக்யராஜ் மூலம் வளர்ந்து பெரிய ஆளானேன்," என்றார்.

என் குரு
ஊர்வசி பேசும் போது, சினிமாவில் நடிக்க தெரியாமல் இருந்த எனக்கு நடிப்பு சொல்லி கொடுத்து நடிகையாக்கிய குரு பாக்யராஜ் சார் என்றார்.
இயக்குநர்கள் பார்த்திபன், ஆர்.கே.செல்வமணி ஆகியோரும் விழாவில் பங்கேற்று வாழ்த்திப் பேசினார்கள்.


Click it and Unblock the Notifications











