கூலிங் கிளாசை சுற்றி விட்டு… ரஜினி போல மாஸ் காட்டிய தோனி !

சென்னை : தல தோனி ஐபிஎல் விளம்பரத்திற்காக ரஜினி கெட்டப்பில் மாஸாக இருக்கும் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.

Former Indian cricket team skipper MS Dhoni was seen dressed up like superstar Rajinikanth

அஜித்,விஜய், சூர்யா, தனுஷ் போன்ற ரசிகர்களுக்கு எவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்களோ அதைவிட அதிகமான ரசிகர்களை வைத்திருக்கிறார் நம்ம தல தோனி. சாமானிய மக்கள் மட்டுமல்ல சினிமா பிரபலங்களும் இவருக்கு தீவிர ரசிகர்களாக இருக்கிறார்கள்,

Recommended Video

கூலிங் கிளாசை சுற்றி விட்டு… ரஜினி போல மாஸ் காட்டிய தோனி

இந்திய அணியின் நட்சத்திர முன்னாள் கேப்டன் எம்.எஸ் தோனி, இந்திய அணிக்கு டி20, ஒருநாள் உலகக் கோப்பை உள்ளிட்ட பல கோப்பைகளை வென்று தந்துள்ளார். இது தவிர ஐபிஎல் தொடரில் சி.எஸ்.கே அணிக்கு தலைமை தாங்கும் தோனி, 4 முறை தொடரை வென்று தந்துள்ளார். இதனால் தோனிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் அதிகம்.

மகேந்திர சிங் தோனியை இதுவரை கண்டிராத அவதாரத்தில் காட்சிப்படுத்தும் கிராஃபிக் நாவலை மிடாஸ் டீல்ஸ் பிரைவேட் லிமிடெட் உடன் இணைந்து விர்சு ஸ்டுடியோஸ் உருவாக்கியுள்ளது.

காமிக் பிரியர்களுக்கும் எம்எஸ் தோனி ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியைத் தரும் வகையில், மிடாஸ் டீல்ஸ் பிரைவேட் லிமிடெட் உடன் இணைந்து விர்சு ஸ்டுடியோ தனது வரவிருக்கும் மெகா பட்ஜெட் கிராஃபிக் நாவலான 'அதர்வா - தி ஆரிஜின்' மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. 150 ஓவியங்கள் வரையப்பட்டது இந்த நாவல் புத்தகத்தின் முதல் பிரதியை நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில், தோனி ஐபிஎல் 2022 விளம்பரத்திற்காக ரஜினிகாந்தாக மாறி மாஸாகபோஸ் கொடுத்திருந்தார். இந்தியன் பிரீமியர் லீக்கின் வரவிருக்கும் சீசனின் விளம்பர வீடியோவிற்கு எம்எஸ் தோனி சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தாக போஸ் கொடுத்தார். இந்த விளம்பரத்திற்காக தோனி காக்கி சட்டையுடன் பேன்ட் அணிந்திருந்தார், அது பேருந்து ஓட்டுநரின் உடையைப் போன்றது. இந்த ப்ரோமோ ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலுக்காக படமாக்கப்பட்டது மற்றும் ப்ரோமோ வெளியானவுடன் சமூக வலைதளங்களில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X