சூப்பர் அப்டேட்! உலகக்கோப்பை நாயகன் யுவராஜ் சிங் வாழ்க்கை வரலாறு படத்தின் பெயர் அறிவிப்பு!

மும்பை: ஐசிசி டி20 உலகக்கோப்பையில் 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் விளாசி சாதனை படைத்த வீரர் என்றால் அது இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர், தற்போது நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் அம்பாசிடர் யுவராஜ் சிங் தான். இந்திய அணி 2007ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை வெல்வதற்கு மட்டும் இல்லாமல், 2011ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையை வெல்லவும் யுவராஜ் சிங் முக்கிய காரணமாக இருந்துள்ளார்.

ஏற்கனவே உலக்கோப்பை நாயகன் தோனியின் வாழ்க்கை வரலாறு, தோனி அன் டோல்டு ஸ்டோரி என்ற பெயரில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் யுவராஜ் சிங்கின் வாழ்க்கை வரலாறு சினிமாவாக எடுக்கப்படுகின்றது என்ற தகவல் ஏற்கனவே வெளியானது. மேலும் இந்த படத்தினை யுவராஜ் சிங்கே இயக்கவுள்ளார் என்ற தகவலும் ஏற்கனவே வெளியானது.

Yuvaraj Singh BCCI

யுவராஜ் சிங்: யுவராஜ் சிங் முதன் முதலாக கடந்த 2000ஆம் ஆண்டு கென்யாவுக்கு எதிரான ஒருநாள் தொடரின்போது அறிமுகமானார். தனது அசாத்திய பேட்டிங்கினால் யுவராஜ் சிங் இந்திய அணியில் தனக்கான இடத்தினை நிரந்திரமாக்கிக் கொண்டார். இந்திய அணியில் தோனி அறிமுகமாவதற்கு முன்னரே யுவராஜ் சிங் விளையாடி வந்தார்.

தலைசிறந்த வீரர்: ஆல்ரவுண்டரான யுவராஜ் சிங் இந்திய அணியின் மிகப்பெரிய நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்தார். குறிப்பாக டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பினால் யுவராஜ் சிங் களமிறங்கி சூழலுக்கு ஏற்ப விளையாடி அணியை வெற்றி பெறச் செய்யும் அளவிற்கு திறமை படைத்தவராக இருந்தார். யுவராஜ் சிங் கிரிக்கெட்டில் இருந்து விலகிய பின்னர் அவரது இடத்தை நிரப்பும் வகையில் யாரும் இன்னும் இந்திய அணிக்கு வரவில்லை. ஜடேஜா, அக்‌ஷர் பட்டேல் போன்றோர் இடது கை பேட்ஸ்மேனாக இருந்தாலும் யுவராஜ் சிங் இடத்தினை யாராலும் இட்டு நிரப்ப முடியவில்லை. கடந்த 2023 உலகக் கோப்பையில் யுவராஜ் சிங் போன்ற வீரர் இல்லாதது மிகப்பெரிய பேசுபொருளானது.

Yuvaraj Singh BCCI

புற்றுநோய்: 2011 உலகக் கோப்பைத் தொடரின்போது யுவராஜ் சிங் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது தெரியவந்தது. இதனால் சிகிச்சைக்காக யுவராஜ் சிங் கிரிக்கெட்டில் இருந்து விலகிவிடுவார் என அனைவரும் நினைத்துக் கொண்டு இருக்கையில், எனது வாழ்க்கையே கிரிக்கெட்தான், உலகக்கோப்பையை வென்று கொடுத்துவிட்டு சிகிச்சைக்குப் போகின்றேன் எனக் கூறி அணியில் இருந்த அனைவருக்கும் உத்வேகம் அளித்தார். உலகக்கோப்பையை வெல்லவும் முக்கிய காரணமாக இருந்தார்.

ஒரே ஓவரில் 6 சிக்ஸர்: 2007ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் இங்கிலாந்து அணியின் ஸ்டூவர்ட் பிராட் வீசிய ஒரு ஓவரில் மைதானத்தின் அனைத்து திசைகளிலும் 6 சிக்ஸர்கள் விளாசி சாதனை படைத்தார். இவ்வாறு பல சுவாரஸ்யமான நிகழ்வுகள் யுவராஜ் சிங்கின் கிரிக்கெட் வாழ்க்கையில் நடைபெற்றுள்ளது. இவையெல்லாம் அவரது வாழ்க்கை வரலாறு குறித்த படத்தில் கட்டாயம் இடம் பெற்று பலருக்கு உத்வேகம் அளிக்கும் என எதிர்பார்க்கலாம்.

Yuvaraj Singh BCCI

படத்தின் பெயர்: இந்நிலையில் யுவராஜ் சிங்கின் வாழ்க்கை வரலாறுக்கான படத்தின் பெயரை அவரது தந்தை யோகராஜ் சிங் அறிவித்துள்ளார். இது தொடர்பாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், யுவராஜ் சிங்கின் வாழ்க்கை வரலாறு படத்தின் பெயர் " த மேன் ஆஃப் தி லாங்கஸ்ட் ஹவர்" என தெரிவித்தார்.

Yuvaraj Singh BCCI

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X