twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    என்னது...ராக்கெட்ரி பட கதை உண்மை இல்லையா?...பகீர் கிளப்பும் இஸ்ரோ விஞ்ஞானிகள்

    |

    சென்னை : நடிகர் மாதவன் சமீபத்தில் இயக்கி, நடித்த படம் ராக்கெட்ரி : தி நம்பி எஃபெக்ட். மாதவன், சிம்ரன் உள்ளிட்டோர் நடித்த இந்த படம் ஜுலை 1 ம் தேதி 5 மொழிகளில் ரிலீசாகி பெரும் வரவேற்பை பெற்றது.

    Recommended Video

    Music Director Sam CS Exclusive | 800 ருபாய் வாடகை வீட்டில் வாழ்ந்திருக்கிறேன் | *Interview

    இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் பயோபிக் படமான இதில் நம்பி நாராயணன் ரோலில் மாதவனும், அவருடைய மனைவி ரோலில் சிம்ரனும் நடித்திருந்தனர். அனைத்து தரப்பிலும் வரவேற்பை பெற்ற இந்த படம் பாக்ஸ் ஆபீசிலும் நல்ல வசூலை பெற்றது.

    இஸ்ரோ விஞ்ஞானியும், ஏரோ ஸ்பேஸ் இன்ஜினியருமான நம்பி நாராயணன் தவறான குற்றச்சாட்டுக்களால் பல பிரச்சனைகளை சந்தித்து, பிறகு தான் குற்றம் அற்றவர் என்பதை நிரூபித்தார்.தற்போது மற்றொரு புதிய பிரச்சனையில் இந்த படம் சிக்கி உள்ளது.

    Thiruchitrambalam Day 3 Box Office: வெற்றியை ருசித்த தனுஷ்.. வசூல் வேட்டையாடும் திருச்சிற்றம்பலம்!Thiruchitrambalam Day 3 Box Office: வெற்றியை ருசித்த தனுஷ்.. வசூல் வேட்டையாடும் திருச்சிற்றம்பலம்!

    விஞ்ஞானிகள் குழு அளித்த தகவல்

    விஞ்ஞானிகள் குழு அளித்த தகவல்

    ஆகஸ்ட் 24 ம் தேதி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானிகள் குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர்கள், முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயண் கைது செய்யப்பட்ட போது நாடு கிரையோஜெனிக் என்ஜின்களை உருவாக்குவதில் மிகவும் தாமதத்தை சந்தித்தது.

    பத்மபூஷனே கொடுக்கல

    பத்மபூஷனே கொடுக்கல

    அதே நேரத்தில் நாடு பெரும் நிதி இழப்பை சந்தித்தது.விஞ்ஞானி நம்பி நாராயணன் தவறான தகவல்களை பரப்பி வருகிறார். படத்தில் காட்டப்பட்டுள்ள அனைத்தும் உண்மையல்ல. முன்னாள் விஞ்ஞானியான இவருக்கு இஸ்ரோவில் பணிபுரிந்ததற்காக பத்மபூஷன் விருது கிடைக்கவில்லை.

    கலாம் உதவியதும் உண்மையில்லையா

    கலாம் உதவியதும் உண்மையில்லையா

    நம்பி நாராயணன் கிரையோஜெனிக் என்ஜின்களில் பணிபுரிந்த குழுவில் கூட இல்லை. நம்பி நாராயணன், ஏபிஜே அப்துல் கலாமுடன் மிகக் குறுகிய காலம் மட்டுமே பணியாற்றினார். நம்பி நாராயணன் அப்துல் கலாம் தவறு செய்தபோது அவருக்கு உதவியது மற்றும் திருத்தியது போல் படத்தில் கூறப்படுவது போல் எதுவும் இல்லை என தெரிவித்துள்ளனர்.

    எதை நம்புறதுனே தெரியல

    எதை நம்புறதுனே தெரியல

    ராக்கெட்ரி படம் ஏற்கனவே பட பிரச்சனைகள், சர்ச்சைகளில் சிக்கி வெளியே வந்த நிலையில், தற்போது படத்தில் கூறப்பட்டுள்ள தகவல்கள் பலவும் பொய்யானவை என இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானிகள் குழுவினர் தெரிவித்துள்ளது பலரையும் அதிர்ச்சி ஆக்கி உள்ளது. முக்கியமான பயோபிக் படத்தில் தவறான தகவல்கள் என்றால், அப்படியானால் பயோபிக் படங்களை எப்படி நம்புவது என பலரும் குழப்பத்துடன் சந்தேகம் கிளப்பி வருகின்றனர்.

    English summary
    Group of former ISRO scientists press meet, the former scientist alleged that the country during the arrest of Nambi Narayan faced a lot of delay in the development of cryogenic engines and at the same time the country reportedly faced a huge financial loss. They reportedly revealed that scientist Nambi Narayanan is spreading wrong facts.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X