Dileep Case: திலீப் குற்றவாளியே இல்லை.. எல்லாமே ஜோடிச்ச கேஸ்.. முன்னாள் பெண் டிஜிபி பரபரப்பு வீடியோ
திருவனந்தபுரம்: கேரளாவை சேர்ந்த முன்னாள் டிஜிபி ஸ்ரீலேகா தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது.
கடந்த 2017ம் ஆண்டு பிரபல நடிகை காரில் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் நடிகர் திலீப் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், அவர் குற்றவாளியே இல்லை என்றும் அனைத்தும் ஜோடிக்கப்பட்ட கேஸ் என முன்னாள் பெண் டிஜிபி பேசியிருப்பது அதிர்வலைகளை உண்டு செய்திருக்கிறது.

திலீப் குற்றவாளியா
நடிகர் திலீப்புக்கும் இந்த வழக்குக்கும் எந்தவொரு சம்மந்தமும் இல்லை என கேரளாவின் முன்னாள் டிஜிபி ஸ்ரீலேகா தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ ஒட்டுமொத்த மலையாள திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இந்த விவகாரத்தில் போலீசார் மீது தான் தவறு உள்ளதாகவும், அவர்கள் செய்யும் தவறை ஏன் தொடர்ந்து மறுத்து மறைத்து வருகின்றனர் என்கிற கேள்வியையும் அவர் எழுப்பி உள்ளார்.

ஜோடித்த போலீஸ்
இந்த வழக்கில் நடிகர் திலீப்பை வேண்டுமென்றே இந்த வழக்கில் ஈடுபடுத்தி உள்ளனர் என்றும் அவர் ஒரு அப்பாவி என்றும் கூறியுள்ளார். போலீஸார் ஜோடித்த வழக்கில் திலீப் சிக்கி இருப்பது கூடிய விரைவிலேயே வெளிச்சத்திற்கு வரும் என்றும் அவருக்கு எதிராக உருவாக்கப்பட்ட ஆதாரங்கள் அனைத்துமே போலியானைவை என்று முன்னாள் டிஜிபி ஸ்ரீலேகா தனது யூடியூப் பக்கத்தில் பேசியிருப்பது பரபரப்பை கிளப்பி உள்ளது.

நடிகை பலாத்கார வழக்கு
கடந்த 2017ம் ஆண்டு முன்னணி நடிகையை காரில் கடத்திச் சென்று பலாத்காரம் செய்த வழக்கில் அந்த சித்ரவதை வீடியோ நடிகர் திலீப்பின் மொபைலில் இருந்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். மேலும், நடிகர் திலீப்பின் இரண்டாம் மனைவி காவ்யா மாதவன் உள்ளிட்ட சிலரும் இந்த வழக்கில் விசாரிக்கப்பட்டுள்ளனர்.

மஞ்சு வாரியர்
இந்த வழக்கில் நடிகர் திலீப்புக்கு எதிராக அவரது முதல் மனைவி நடிகை மஞ்சு வாரியர் தனது வாக்குமூலத்தை கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. போலீசார் நடிகர் திலீப்பை திட்டமிட்டு இதில் சிக்க வைக்க நினைப்பதற்கு பின்னால் ஒரு பெரிய சதிச் செயலே இருப்பதாகவும் கூடிய விரைவில் அனைத்தும் வெளிப்படும் என்றும் ஸ்ரீலேகா பேசியிருப்பது புதிய புயலை கிளப்பி இருக்கிறது.

உண்மையான குற்றவாளிகளை
இந்த வழக்கில் திலீப்பின் பின்னால் செல்லாமல் சரியான விசாரணையை நடத்தி இருந்தால் குற்றத்தில் ஈடுபட்ட 5 முதல் 6 பேரை போலீசார் இன்னேரம் பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி இருக்கலாம் என்றும், அதையெல்லாம் விட்டு விட்டு ஏன் அடாவடித்தனம் செய்து வருகின்றனர். காவல் துறை மீது தனக்கு தற்போதும் நம்பிக்கை இருக்கிறது. ஆனால், இந்த விவகாரத்தில் அவர்கள் நடந்து கொள்வது சரியில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

நயன்தாரா திருமணத்தில்
மலையாள திரையுலகமே நடிகர் திலீப்பை இந்த விவகாரம் தொடர்பாக ஒதுக்கி வைத்திருக்கும் நிலையில், நடிகை நயன்தாராவின் திருமணத்தில் நடிகர் திலீப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டு அவர் கலந்து கொண்டது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. நடிகர் திலீப் தனது திருமணத்தில் கலந்து கொள்ள வேண்டும் என நடிகை நயன்தாரா அழைப்பு விடுத்த நிலையில், அவர் அந்த திருமணத்தில் கலந்து கொண்ட புகைப்படங்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











