மிஸ் சென்னை சம்யுக்தாவும் ஆஜர்.. பிக்பாஸ் வீட்டில் 14வது போட்டியாளராக அசத்தல் என்ட்ரி!
சென்னை: மிஸ் சென்னை பட்டம் வென்ற பிரபல மாடல் அழகியும் டிவி சீரியல் நடிகையுமான சம்யுக்தா பிக் பாஸ் தமிழ் சீசன் 4ல் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார்.
Recommended Video
பிக் பாஸ் நிகழ்ச்சியில் மாடலிங்கில் கலக்கும் பெண்கள் மற்றும் ஆண்கள் முதல் சீசனில் இருந்தே போட்டியாளர்களாக கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
சம்யுக்தாவின் வரவு இந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியை செம ஸ்டைலிஷ் ஆக கொண்டு செல்லும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இல்லவே இல்லை
பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட சில முக்கிய நபர்கள், நாங்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என அறிவித்துள்ளது ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. நடிகை லக்ஷ்மி மேனன், அம்ரிதா அய்யர், அபி ஹாசன், கருண் ராமன், ஷாலு ஷம்மு உள்ளிட்டோர் இந்த சிசனில் இல்லவே இல்லை.

இவர்கள் தான்
அடுத்த சில மாதங்களுக்கு ரசிகர்களை கட்டிப் போட்டு வைத்திருக்கும் பிக்பாஸ் பிரபலங்கள் இவர்கள் தான். ரியோ ராஜ், ஷிவானி, ரேகா, கேப்ரில்லா, ரம்யா பாண்டியன், சோமசேகர், பாலாஜி முருகதாஸ், ஆரி அர்ஜுனா, ஜித்தன் ரமேஷ், வேல்முருகன், அனிதா சம்பத், சம்யுக்தா சுரேஷ் சக்கரவர்த்தி மற்றும் ஆஜித் உள்ளிட்டோர் கன்ஃபார்ம் செய்யப்பட்டு வீட்டுக்குள் சென்று விட்டனர்.

மாடல் அழகி
பிக் பாஸ் முதல் சீசனில் நடிகை ரைசா வில்சன், மாடல் அழகி மற்றும் நடிகையுமான யாஷிகா ஆனந்த், சாக்ஷி அகர்வால் வரிசையில் இந்த ஆண்டு மாடல் அழகியும் சீரியல் நடிகையுமான சம்யுக்தா ஏற்கனவே எதிர்பார்த்தபடி பிக்பாஸ் நிகழ்ச்சியில் தெறி கவர்ச்சியான உடையணிந்து கலந்து கொண்டார்.

மிஸ் சென்னை
சம்யுக்தா என்றவுடன் கோமாளி படத்தில் நடித்த, சமீபத்தில் உள்ளாடை சர்ச்சையில் தாக்கப்பட்ட சம்யுக்தா ஹெக்டே என நினைத்து விட வேண்டாம். இவர் சென்னையை சேர்ந்தவர். மிஸ் சென்னை பட்டத்தையும் வென்றுள்ளார். இவரது முழுப் பெயர் சம்யுக்தா கார்த்திக்.

சந்திரகுமாரி
நடிகை ராதிகா சரத்குமார் நடிப்பில் சன் டிவியில் வெளியான சந்திரகுமாரி சீரியலில் நடித்துள்ளார் சம்யுக்தா. கடந்த ஆண்டு மலையாளத்தில் இயக்குநர் ஷாஜி என். கருண் இயக்கத்தில் வெளியான OOLU எனும் ஃபேண்டஸி படத்திலும் இவர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஷில்பா மஞ்சுநாத், லக்ஷ்மி மேனன், அம்ரிதா அய்யர் உள்ளிட்ட நடிகைகள் பங்கேற்காத குறையையும் இவர் தீர்த்து வைப்பார் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications











