தீராத கேன்சர்.. சிகிச்சைப் பெற்று வந்த பிரபல மாடல் திடீர் மரணம்.. நடிகர், நடிகைகள் இரங்கல்!
மும்பை: கேன்சருக்கு சிகிச்சை பெற்று வந்த பிரபல மாடல் திடீரென உயிரிழந்திருப்பது பாலிவுட்டில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பாலிவுட், கடந்த சில மாதங்களாகக் கடும் சோதனைகளைச் சந்தித்து வருகிறது.
Recommended Video
பல முக்கிய நட்சத்திரங்களை இழந்திருக்கிறது. இது இன்னும் தொடர்வது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் இர்ஃபான்கான்
கடந்த ஏப்ரல் மாதம், புற்றுநோய்க்கு சிகிச்சைப் பெற்று வந்த பிரபல நடிகர் இர்ஃபான்கான் திடீரென மரணமடைந்தார். அவர் மறைந்த மறுநாளே, மூத்த பாலிவுட் நடிகர் ரிஷி கபூர் இறந்தார். அவரும் கேன்சருக்கு சிகிச்சை பெற்று வந்தவர். இந்த மரணங்கள் பாலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்த நிலையில், பிரபல நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார்.

தற்கொலை
இது இந்தியா முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பான விசாரணை நடந்து வருகிறது. இதையடுத்து இந்தி மற்றும் சில மாரத்தி நடிகர், நடிகைகள் திடீரென தற்கொலை செய்து கொண்டனர். சின்னத்திரை நடிகர், நடிகைகளும் வாய்ப்புகளை இழந்ததால் மன அழுத்தம் காரணம் தற்கொலை செய்து கொண்டனர்.

மாடல் சிமர் துகல்
இந்நிலையில் பிரபல முன்னாள் மாடலும் பாலிவுட் பேஷன் டிசைனருமான சிமர் துகல் திடீரென மரணமடைந்திருப்பது பாலிவுட்டில் மேலும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சிமர் துகல் கடந்த சில வருடங்களாக கேன்சருக்கு சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி நேற்று மரணமடைந்தார். அவருக்கு வயது 52. திருமணத்துக்குப் பிறகும் மாடலிங்கில் கலக்கி வந்தவர் சிமர் துகல்.

மலைகா அரோரா
அவர் மறைவை அடுத்து, பிரபல பாலிவுட் நடிகைகள் மலைகா அரோரா, லாரா தத்தா, கிம் சர்மா உட்பட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 'என் கண்கள் கண்ணீரை நிறுத்தவில்லை. என் அழகிய தோழி, என் தேவதை, அதிக இரக்கம் கொண்டவர் சிமர்.. உன் இழப்பால் வாடுகிறேன்' என்று நடிகை மலைகா அரோரா தெரிவித்துள்ளார். மேலும் பல நடிகர், நடிகைகளும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மறைவு அதிர்ச்சி
பிரபல வில்லன் நடிகர் ராகுல் தேவ் கூறும்போது, மாடலிங் செய்து கொண்டிருந்தபோது நான் அதிகம் உரையாடுகின்ற தோழியாக இருந்தார் சிமர். மறைந்த என் மனைவி ரினாவுக்கும் அவர் தோழியாக இருந்தார். அவர் மற்றவர்களுடன் அதிகம் நெருங்கிவிடமாட்டார். ஆனால் அழகானவர். அவர் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது ' என்று தெரிவித்துள்ளார். ராகுல் தேவ் தமிழில், முனி, ஜெய்ஹிந்த் 2, வேதாளம் உட்பட சில படங்களில் நடித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











