அடித்து, மாடியில் இருந்து தள்ளினார்: பார்த்திபன் மீது போலீசில் புகார்
Recommended Video
சென்னை: ஜெயங்கொண்டான் என்பவர் நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் மீது நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் வீட்டில் வேலை செய்து வந்தவர் ஜெயங்கொண்டான். திருவான்மியூரில் உள்ள பார்த்திபனின் வீட்டில் திருட்டு சம்பவம் நடந்ததை அடுத்து ஜெயங்கொண்டான் பணியில் இருந்து நீக்கப்பட்டார்.

இந்நிலையில் ஜெயங்கொண்டான் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு சென்று பார்த்திபன் மீது புகார் அளித்துள்ளார். அந்த புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
பார்த்திபன் என்னை பணியில் இருந்து நீக்கினார். அதற்கான காரணத்தை கேட்க அவரை சந்திக்க சென்றேன். ஆனால் அவரோ பதில் அளிக்காமல் கோபம் அடைந்து என்னை அடித்து, மாடியில் இருந்து தள்ளிவிட்டார். என்னை அவர் கொலை செய்ய முயன்றார். என்னை தாக்கிய பார்த்திபன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
ஜெயங்கொண்டான் பார்த்திபனின் வீட்டில் 10 ஆண்டுகளாக வேலை செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புகார் குறித்து பார்த்திபன் தரப்பில் இருந்து இதுவரை விளக்கம் எதுவும் அளிக்கப்படவில்லை.


Click it and Unblock the Notifications











