twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரசிகர்கள் கொண்டாடும் பொன்மனச் செம்மல்.. எம்ஜிஆர் பிறந்தநாள் கொண்டாட்டம்!

    |

    சென்னை : நடிகரும் மறைந்த முன்னாள் தமிழக முதல்வருமான எம்ஜிஆரின் 106வது பிறந்தநாள் இன்றைய தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

    இதையொட்டி அதிமுக கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

    நடிகராகவும் நாடக கலைஞராகவும் ரசிகர்களை கவர்ந்த எம்ஜிஆர் தமிழக முதலமைச்சராகவும் தன்னுடைய சிறப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

    1952 ஆம் ஆண்டு எம்ஜிஆரின் 2 படங்களை வீழ்த்தி வந்த பராசக்தி..சுவையான புதுத்தகவல்கள்1952 ஆம் ஆண்டு எம்ஜிஆரின் 2 படங்களை வீழ்த்தி வந்த பராசக்தி..சுவையான புதுத்தகவல்கள்

    முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர்

    முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர்

    நடிகர், நாடகக் கலைஞர், தயாரிப்பாளர், இயக்குநர், முதலமைச்சர் என பன்முகத் திறமையுடன் காணப்பட்டவர் எம்ஜிஆர். 1936ம் ஆண்டு முதல் 1987ம் ஆண்டு வரை இவரது திரையுலகப் பயணம் தொடர்ந்தது. சதி லீலாவதி என்ற படத்தில் சிறிய வேடத்தில் தன்னுடைய அறிமுகத்தை துவங்கிய எம்ஜிஆர் தொடர்ந்து சிறப்பான பல படங்களை கொடுத்துள்ளார்.

    வில்லனாக மிரட்டிய எம்ஜிஆர்

    வில்லனாக மிரட்டிய எம்ஜிஆர்

    கடந்த 1941ம் ஆண்டில் தியாகராஜ பாகவதருடன் இணைந்து அசோக்குமார் என்ற படத்தில் முதல் முறையாக நடித்துள்ளார் எம்ஜிஆர். இதேபோல பியு சின்னப்பாவுடன் கடந்த 1944ம் ஆண்டில் ஹரிச்சந்திரா என்ற படத்திலும் நடித்துள்ளார். அதற்கு அடுத்த ஆண்டிலேயே சாலிவாகனன் என்ற படத்தில் வில்லனாகவும் மிரட்டியுள்ளார்.

    எம்ஜிஆர் நாயகனாக என்ட்ரி கொடுத்த படம்

    எம்ஜிஆர் நாயகனாக என்ட்ரி கொடுத்த படம்


    எம்ஜிஆர் நாயகனாக களமிறங்கிய படம் ராஜகுமாரி. இந்தப் படம் 1947ம் ஆண்டில் ஜூபிடர் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியானது. தொடர்ந்து இரண்டாவது கதாநாயகன், கதாநாயகன் என தன்னுடைய திரையுலகப் பயணத்தை அமைத்துக் கொண்டார் எம்ஜிஆர். ராஜகுமாரிக்கு பிறகு தனியாக ஹீரோவாக எம்ஜிஆர் நடித்த படம் மருதநாட்டு இளவரசி. இந்தப் படத்தை ஏ. காசிலிங்கம் இயக்கியிருந்தார்.

    சிவாஜியுடன் இணைந்த எம்ஜிஆர்

    சிவாஜியுடன் இணைந்த எம்ஜிஆர்


    கடந்த 1954ம் ஆண்டில் வெளியான கூண்டுக்கிளி என்ற படத்தில் சிவாஜி கணேசனுடன் இணைந்து நடித்துள்ளார் எம்ஜிஆர். இந்தப் படத்தை டிஆர் ராமண்ணா இயக்கியிருந்தார். சிவாஜியுடன் எம்ஜிஆர் இணைந்து நடித்துள்ள ஒரே படம் இது. தொடர்ந்து டிஆர் ராமண்ணா இயக்கத்தில் அடுத்த ஆண்டிலேயே குலேபகாவலி என்ற படத்தில் நடித்தார் எம்ஜிஆர்.

    அலிபாபாவும் நாற்பது திருடர்களும் படம்

    அலிபாபாவும் நாற்பது திருடர்களும் படம்

    டிஆர் சுந்தரம் இயக்கத்தில் எம்ஜிஆர் நடித்த ஈஸ்ட்மேன் கலர் படம் அலிபாபாவும் நாற்பது திருடர்களும். இந்தப் படம் கடந்த 1956ம் ஆண்டில் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் வெளியானது. தொடர்ந்து மதுரை வீரன் உள்ளிட்ட படங்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன.

    ரசிகர்களின் எவர்கிரீன் பேவரிட் படங்கள்

    ரசிகர்களின் எவர்கிரீன் பேவரிட் படங்கள்

    தொடர்ந்து எங்க வீட்டு பிள்ளை, ஆயிரத்தில் ஒருவன், கலங்கரை விளக்கம், அன்பே வா, நான் ஆணையிட்டால், நாடோடி, விவசாயி என தன்னுடைய அடுத்தடுத்த படங்களால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார் எம்ஜிஆர். ரிக்ஷா காரன், உலகம் சுற்றும் வாலிபன் போன்ற படங்களும் ரசிகர்களின் எவர்கிரீன் பேவரிட் படங்களாக அமைந்தன.

    இயக்குநராக எம்ஜிஆர்

    இயக்குநராக எம்ஜிஆர்

    இந்தப் படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்த எம்ஜிஆர், உலகம் சுற்றும் வாலிபன் போன்ற படங்களை இயக்கியும் உள்ளார். தொடர்ந்து தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் சிறப்பான ஆட்சியை கொடுத்துள்ளார். இதனிடையே இன்றைய தினம் எம்ஜிஆரின் 106வது பிறந்தநாளையொட்டி அவரது ரசிகர்கள், தொண்டர்கள் அவரது உருவச்சிலை மற்றும் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

    English summary
    Former Chief minister MGR's 106th birthday celebrated today
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X