DMKவுக்கு இப்படி நடந்திருந்தா சீனே வேற.. விஜய்க்கு தைரியம் இல்லையா? விளாசிய முக்கியப் புள்ளி
சென்னை: நடிகரின் விஜய்யின் தவெக நடந்து முடிந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்று முதன்மைக் கட்சியாக உருவெடுத்துள்ளார். இப்படி இருக்கையில் இவரது கட்சி ஆட்சி அமைக்க கூடுதலாக 11 சட்டமன்ற உறுப்பினர்களில் ஆதரவு தேவை. அப்படி இருக்கையில், ஏற்கனவே 5 சட்டமன்ற உறுப்பினர்கள் வைத்துள்ள காங்கிரஸ் கட்சி தவெகவுடன் கூட்டணிக்கு சென்றுவிட்டது. இதனால் இன்னும் ஆறு சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை. இப்படி இருக்கையில் விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்காமல் ஆளுநர் காலதாமதம் செய்து வருகிறார்.
மேலும், தமிழக வெற்றிக் கழகத்திற்கு 118 எம்.எல்.ஏக்களின் ஆதரவு என்பது இல்லை, அதனால் தான் விஜய்க்கு முதலமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்காமல் உள்ளார் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு தமிழ்நாட்டில் உள்ள திமுக கூட்டணிக் கட்சிகளான விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட மே 17 இயக்கம், நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

ஆதரவு: விஜய் பெரும்பான்மையை சட்டமன்றத்தில் நிரூபித்தால் போதும் என்று பலரும் ஒருமித்த கருத்தை தெரிவித்து வரும் நிலையில், விஜய் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் மூன்று முறை ஆளுநரைச் சந்தித்து விட்டார். ஆனால் ஆளுநரோ, விஜய்க்கு தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்பு செய்து வைக்காமல் காலம் தாழ்த்திக் கொண்டு உள்ளார், இன்னும் சொல்லப் போனால் பெரும்பான்மையை நிரூபியுங்கள் என்று கூறி வருகிறார்.
தைரியம் இல்லையா?: இப்படி இருக்கையில் விசிகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷநவாஸ் தனது எக்ஸ் பக்கத்தில் இது போல திமுகவுக்கு நடைபெற்றிருந்தால் அங்கு நடப்பதே வேறு என்று பதிவிட்டுள்ளார். அதாவது அவரது பதிவில், " தனிப்பெரும் கட்சியாக தவெக வந்த பிறகும், ஆட்சி அமைக்க இடையூறு செய்கிறார் ஆளுநர். இதைக் கண்டிக்க அஞ்சுகிறது தவெக. இதுவே 108 எண்ணிக்கை திமுகவிடம் இருந்து, ஆளுநர் இப்படி இழுத்தடித்தால் என்ன நடந்திருக்கும்? சட்டமன்றத்தில் ஆளுநர் உரையின் போது RN ரவிக்கு நடந்தது போல் நடந்திருக்கும். ஆளுநரை எதிர்ப்பது என்பது பாஜகவை எதிர்ப்பதாகும். அதற்கு கொள்கை உறுதியும் துணிவும் வேண்டும். அது உள்ளதா விஜயிடம்?" என்று கேள்வி எழுப்பி உள்ளார். விஜய்க்கு நடப்பது மாநில உரிமையில் மத்திய அரசு தலையீடு செய்வது போல உள்ளது என்பதை விஜய் ஏன் உணர மறுக்கிறார் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.



Click it and Unblock the Notifications