மரியாதை இப்போ தான் கிடைக்குது.. முதலமைச்சர் விஜய்யை புகழ்ந்த கல்வி அமைச்சர் ராஜ்மோகன்!
சென்னை: புட் சட்னி யூடியூப் சேனல் மூலம் பிரபலமாகி பாபா பிளாக் ஷீப் படத்தை இயக்கிய ராஜ்மோகன் சன் டிவி, விஜய் டிவியில் பட்டிமன்ற பேச்சாளராகவும் அசத்தி வந்தார். விஜய்யின் தவெக கட்சியில் இணைந்த நிலையில், தற்போது முதலமைச்சர் விஜய் தலைமையில் கல்வி அமைச்சராகவும் சினிமா துறை அமைச்சராகவும் மாறியுள்ள ராஜ்மோகன் சமீபத்தில் ஒரு கல்வி விழாவில் கலந்துக் கொண்டு பேசியது தீயாக பரவி வருகிறது.
பணம், வீடு கார் எல்லாம் சம்பாதித்து வாங்கிவிட்டேன். ஆனால், மரியாதை இப்போ தான் கிடைக்குது என்றும் அதற்கு காரணம் முதலமைச்சர் விஜய் தான் என்று ராஜ்மோகன் பேசிய காட்சிகள் தவெகவினரையும் விஜய் ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.

நடிகராக இருந்து ரசிகர்களை கவர்ந்தது மட்டுமின்றி தற்போது முதலமைச்சராக மாறி மக்களை கவர்ந்து வரும் விஜய்யின் பிறந்தநாள் வரும் ஜூன் 22ம் தேதி கோலாகலமாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மரியாதை இப்போதான் கிடைக்குது: சாதாரண குடும்பத்தில் இருந்து வந்து யூடியூபில் போராடி கஷ்டப்பட்டு எனக்கான ஒரு இடத்தை பிடித்தேன். பணம், வீடு, கார் எல்லாம் வாங்கிட்டேன். ஆனால், முதலமைச்சர் விஜய் மாண்புமிகு அமைச்சர் ராஜ்மோகன் என என்னை ஆக்கிய போதுதான் மரியாதை வந்தது. இப்போ நாலு இடத்துக்குச் சென்றால் எல்லாரும் கையெடுத்துக் கும்பிடுறாங்க. பள்ளிக் குழந்தைங்க என்னை அவங்க சொந்த மாமா போல பார்க்கிறாங்க இதுதான் பெரிய விசயம் என பேசியுள்ளார்.
PET பீரியட் கட் பண்ணக் கூடாது: குழந்தைகள் எனக்கு மெசேஜ் பண்றாங்க. ஒரு பெரிய பிரச்னைன்னு நான் என்னன்னு கேட்ட, PET பீரியட் கட் பண்ணிட்டாங்கன்னு சொல்றாங்க. குழந்தைகள் எந்தளவுக்கு படிக்கணுமோ அந்த அளவுக்கு விளையாடவும் செய்யணும். அவர்களை அன்பாக கனிவுடன் நடந்துங்க. இந்தியாவுக்கே அப்துல் கலாமை தந்தது நம் மாநிலம் தான். குழந்தைகளுக்கு ஏற்ற கல்வி சூழலை நாம் இன்னமும் எளிதாக்க போகிறோம். நிச்சயம் உங்கள் பள்ளிகளில் இருந்தும் நாளை அப்துல் கலாம்கள் உருவார்கள் என்றார்.
யூடியூபர் டு அமைச்சர்: யூடியூபர்கள் சினிமாவில் அறிமுகம் ஆவதே பெரிய விஷயமாக பார்க்கப்பட்டு வரும் நிலையில், யூடியூபர் சினிமாவில் இயக்குநராக முயற்சித்து பெரிய வெற்றி பெறவில்லை என்றாலும் மாணவர்களுக்கான படத்தை எடுத்த நிலையில், இன்று மாண்புமிகு கல்வி அமைச்சராக மாறியிருப்பதே பாராட்டுக்குரியது என விஜய் ரசிகர்கள் ராஜ்மோகனை கொண்டாடி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications