twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இயக்குநர் கே பாலச்சந்தர் பெயரில் அறக்கட்டளை.. ஆண்டு தோறும் சினிமா விருது

    By Shankar
    |

    சென்னை: சமீபத்தில் மறைந்த இயக்குநர் கே பாலச்சந்தரின் பெயரில் அவரது குடும்பத்தினர் அறக்கட்டளை தொடங்கியுள்ளனர்.

    இந்த அறக்கட்டளை மூலம், இனி ஆண்டு தோறும் அவர் பிறந்த நாளில் நாடக, சினிமா, தொலைக்காட்சி கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளன.

    இதுகுறித்து இந்த அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலரும் பாலச்சந்தர் மகளுமான புஷ்பா கந்தசாமி வெளியிட்டுள்ள அறிக்கை:

    Foundation formed in the name of K Balachander

    கடந்த வருடம் டிசம்பர் 23ம் தேதி இயக்குனர் சிகரம் கே. பாலச்சந்தர் அவர்கள் அமரரான செய்தி கேட்டு பெருவாரியாக வந்து எங்கள் குடும்பத்தின் ஒரு அங்கத்தினராய் இணைந்து எனது தந்தைக்கு மரியாதை செலுத்தி வேண்டிய உதவிகள் செய்த பத்திரிகை, ஊடக நண்பர்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் எனது தந்தையின் தயாரிப்பு நிறுவனமான 'கவிதாலயா' விற்கு இத்தனைக்காலம் பெரும்பாலமாக இருந்து எங்களுக்கு ஆதரவு கொடுத்துவரும் உங்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றி கூறவிழைகிறேன்.

    எங்களது தந்தை கே. பாலசந்தர் அவர்களின் பெயரில் 'கே.பாலசந்தர் பவுண்டேஷன்' (K. Balachander Foundation) என்ற அறக்கட்டளை அமைப்பை ஏற்படுத்தியுள்ளோம்.

    இந்த அமைப்பிற்கு கே.பியின் குடும்ப உறுப்பினர்களான ராஜம் பாலசந்தர், புஷ்பா கந்தசாமி, பிரசன்னா, கீதா கைலாசம், கந்தசாமி பரதன் இவர்களுடன் இயக்குனர் வசந்த் சாய் ஆகியோர் அறங்காவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

    Foundation formed in the name of K Balachander

    இந்த அமைப்பின் மூலம் கீழ்கண்ட திட்டங்களை நாங்கள் விரைவில் முறையாக அனைத்து ஊடகங்களுக்கும் தகவல் அளித்துவிட்டு செயல்படுத்த உள்ளோம்.

    1. கே.பி. அவர்களின் விருப்பபடி திரைப்படத் துறையைச் சேர்ந்த நலிந்த தொழிலாளிகளின் குழந்தைகளுக்கு கல்வி உதவி.

    2. ஒவ்வொரு ஆண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட கல்லூரிகளில் Visual Communication துறையில் பயிலும் மாணவர்களில்சிறந்தவருக்கு கே பாலசந்தர் பெயரில் "Creative Excellence" விருது வழங்குதல்.

    3. ஒவ்வொரு ஆண்டும் அவருடைய பிறந்த தினமான ஜுலை 9ல் விழா நடத்தி நாடகம், திரைப் படம், சின்னத் திரை ஆகிய மூன்று துறைகளில் சிறந்து விளங்கும் படைப்பாளிகளுக்கு விருது வழங்குதல்.

    4. கே.பி அவர்களின் படைப்புகளை Digitize செய்து பாதுகாத்து அவரைப் பற்றிய எல்லா தகவல்களையும் ஆவனப்படுத்தி, எதிர்கால தலைமுறையினருக்கு பயன்தரக்கூடிய ஒரு கண்காட்சியகம் ஏற்ப்படுத்துதல்.

    5. கே.பி அவர்களின் மகன் மறைந்த கைலாசம் அவர்கள் பெயரில் தொலைகாட்சித் துறையைச் சேர்ந்த ஒருவருக்கு சிறந்த படைப்பாளி விருது அளித்தல்.

    6. கே.பி அவர்களைப் பற்றிய புத்தகங்களை வெளிக் கொணர்வது. அதில் முதல் புத்தகம் ஜுலை 9, 2015 அன்றுவெளிவர இருக்கிறது. இதை எழுதியவர் இயக்குனர் வசந்த் சாய்.

    இது போன்ற பல பணிகளை மேற்கொள்ள உள்ளோம். எங்களது பணி சிறந்து விளங்கிட தங்களுடைய மேலானஒத்துழைப்பை வேண்டுகிறோம்.

    -இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார் புஷ்பா கந்தசாமி.

    English summary
    Producer and daughter of late director K Balachander has announced the formation of a trust in the memory of director K Balachander called K Balachander foundation.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X