தமிழக பாக்ஸ் ஆபீஸில் கிங் பேட்டயா, தூக்குதுரையா? #Viswasam #Petta

By Siva

சென்னை: தமிழக பாக்ஸ் ஆபீஸில் தொடர்ந்து எந்த படம் முன்னிலையில் உள்ளது என்பது தெரிய வந்துள்ளது.

ரஜினிகாந்தின் பேட்ட படமும், அஜித்தின் விஸ்வாசம் படமும் ஒரே நாளில் ரிலீஸாகின. இரண்டு பெரிய நடிகர்களின் படங்கள் ஒரே நாளில் வெளியானால் வியாபாரம் பாதிக்கப்படும் என்று அஞ்சப்பட்டது.

இந்நிலையில் இரண்டு படங்களுமே நன்றாக வசூல் செய்து கொண்டிருக்கின்றன.

பேட்ட

பேட்ட

சென்னை பாக்ஸ் ஆபீஸில் பேட்ட தான் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. படம் ரிலீஸாகி நான்கு நாட்களில் சென்னையில் மட்டும் ரூ. 4.81 கோடி வசூல் செய்துள்ளது. தினமும் ரூ. 1 கோடிக்கு மேல் வசூலித்துக் கொண்டிருக்கிறது.

அஜித்

அஜித்

பேட்ட படத்தை அடுத்து சென்னை பாக்ஸ் ஆபீஸில் வசூல் வேட்டை நடத்துவது விஸ்வாசம் தான். விஸ்வாசம் ரிலீஸான நான்கு நாட்களில் சென்னை பாக்ஸ் ஆபீஸில் மட்டும் ரூ. 3.83 கோடி வசூலித்துள்ளது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தலா ரூ. 1 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.

தமிழ் படங்கள்

தமிழ் படங்கள்

சென்னை பாக்ஸ் ஆபீஸில் பேட்ட முதலிடத்திலும், விஸ்வாசம் இரண்டாவது இடத்திலும், கதாநாயகுடு 3வது இடத்திலும், வினய விதேய ராமா 4வது இடத்திலும், எஃப் 2 5வது இடத்திலும் உள்ளன.

தூக்குதுரை

தூக்குதுரை

சென்னை பாக்ஸ் ஆபீஸை பேட்ட ஆண்டாலும் தமிழகம் முழுவதும் கடந்த நான்கு நாட்களில் விஸ்வாசம் தான் அதிகம் வசூல் செய்துள்ளது என்று சினிமா வர்த்தக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். தமிழகம் மட்டும் அல்ல கர்நாடகா, கேரளாவிலும் விஸ்வாசம் முன்னிலையில் உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X