இந்த 4 பேர்ல அந்த வாய்ப்பு யாருக்கு போகப் போகுதோ? தல 61 படத்தை சுற்றி சுழலும் போட்டா போட்டி!
சென்னை: தல அஜித்தின் 60வது படமான வலிமை படத்தை இயக்குநர் எச். வினோத் இயக்கி வருகிறார்.
இந்நிலையில், 'தல 61' படத்தை இயக்கப் போகும் இயக்குநர் யார் என்கிற போட்டி எழுந்துள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களான 3 பேர் நடிகர் அஜித்தை நேரில் சந்தித்து கதை சொல்லி இருப்பதாக அசத்தலான ஒரு அப்டேட் கிடைத்துள்ளது.

சுதா கொங்கரா இயக்கத்தில்
சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், தல 61 படத்தை இயக்குநர் சுதா கொங்கரா இயக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இயக்குநர் சுதா கொங்கரா, தல அஜித்தை சந்தித்து ஒரு கதையை சொல்லி இருப்பதாகவும் தகவல்கள் வலம் வருகின்றன. முன்னதாக தளபதி 65 படத்தை சுதா இயக்குவார் என வதந்திகள் பரவியது குறிப்பிடத்தக்கது.

பில்லா இயக்குநர்
தல அஜித்தை செம ஸ்டைலாக காட்டிய இயக்குநர் விஷ்ணுவர்தனும் சமீபத்தில் அவரை சந்தித்து ஒரு அருமையான கதையை சொல்லி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. பில்லா, ஆரம்பம் படங்களை தொடர்ந்து மீண்டும் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் நடிப்பாரா? என்கிற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளன.

விஜய் இயக்கத்தில்
தல அஜித்தை வைத்து 14 ஆண்டுகளுக்கு முன்பு கிரீடம் படத்தை இயக்கிய இயக்குநர் ஏ.எல். விஜய்யும் நடிகர் அஜித்துக்காக ஒரு கதை சொல்லி இருப்பதாகவும் கூறுகின்றனர். கங்கனா ரனாவத்தை வைத்து தலைவி படத்தை இயக்கியுள்ள ஏ.எல். விஜய், குட்டி ஸ்டோரி ஆந்தாலஜியிலும் ஒரு கதையை இயக்கி உள்ள நிலையில், மீண்டும் அஜித்துடன் இணைய அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மீண்டும் வினோத்
நேர்கொண்ட பார்வை படத்தைத் தொடர்ந்து தல அஜித்தை வைத்து வலிமை படத்தை இயக்கி வரும் எச். வினோத்துக்கு இன்னொரு படத்தையும் பண்ண அஜித் திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. முன்னதாக இயக்குநர் சிவா இயக்கத்தில் வரிசையாக வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என 4 படங்களில் அஜித் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஸ்பெயினில் ஷூட்டிங்
சென்னையை தொடர்ந்து மீண்டும் ஹைதராபாத்தில் வலிமை படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. மேலும், ஸ்பெயின் நாட்டில் ஸ்பெஷல் பைக் ரேஸ் காட்சியை படமாக்க படக் குழுவினருக்கு பிரத்யேக அனுமதி கிடைத்துள்ளதால், விரைவில் ஸ்பெயினுக்கு வலிமை டீம் பறக்கவிருக்கிறது.

சம்மருக்கு இல்லை
இந்த ஆண்டு சம்மருக்கு தல அஜித்தின் வலிமை திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஷூட்டிங்கே இன்னும் முடியவில்லை என்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளுக்கும் அதிக நேரம் எடுக்கும் என்றும் தெரிகிறது. ஆகஸ்ட் அல்லது தீபாவளி வெளியீடாகத் தான் வலிமை ரிலீசாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதன் காரணமாகவே எந்தவொரு அப்டேட்டையும் இன்னமும் படக்குழு வெளியிட மறுத்து வருவதாக கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











